பக்கம்:தம்பியர் இருவர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 தம்பியர் இருவர்

இதுபற்றிக் கவலை இல்லை. என்றாலும், இத்துணைச் சினத்திலும் பரதனைத் தீயவன் என்று தசரதன் கூறத் துணியவில்லை என்பதை மட்டும் அறிதல் வேண்டும்.

இலக்குவன் கண்ட பரதன்

இராமனும் இலக்குவனும் பருந்தும் நிழலும் போல இணை பிரியாது இருப்பவர்கள். எனவே, பரதனைப் பற்றி அறிந்துகொள்ள இராமனுக்கு எத்துணை வாய்ப்பு இருந் திருக்குமோ, அத்துணை வாய்ப்பு இலக்குவனுக்கும் இருந் திருக்கும் அல்லவா? என்றாலும், பரதனைப் பற்றி இராமன் அறிந்திருந்த அளவு இலக்குவன் அறியவில்லை என்பது மட்டுமன்றி, அவன் தவறாகவும் அறிந்திருந்தான். ஆழ்ந்து நோக்கின், இதன் காரணமும் விளங்காமற் போகாது. இராமனிடத்து ஈடுபட்ட இலக்குவன், தன்னைப் பற்றியும் தன்னுடைய இராமபக்தி பற்றியும் மிகுதியாகவே நினைத்துக் கொண்டான்; அதன் பயனாக ஒரு முடிவுக்கும் வந்துவிட்டான்; உண்மையில் இராம னிடம் ஈடுபட்டவர் எவராயினும் தன்னைப் போல இராமனைப் பிரியாமல் இருத்தல் வேண்டும் என்ற முடிபுக்கு வந்துவிட்டான். அவ்வாறு இல்லாத பரதனு டைய இராம பத்தி மட்டமானது என்று கருதினான் போலும் இந்த எண்ணம் உறுதிப்படத் தக்க முறையில் விளைவுகளும் விளைந்துவிட்டன. இராமனுக்குரிய பட்டத் தைப் பரதனுக்கும் பெற்றுக் கொண்டாள் கைகேயி என்று இலக்குவன் கேள்விப்படுகிறான். இதில் குற்றவாளி யார் என்று அவன் நடுவு நிலையுடன் ஆய்ந்திருத்தய் வேண்டும். அவ்வாறு பொறுமையுடன் ஆயாததற்குக் காரணம், அவன் இராமன்மாட்டுக் கொண்ட அன்பேயாகும். அவனால் வழிபடப்படும் இராமனுக்குரிய முடி இன்று அபகரிக்கப்பட்டுவிட்டது, யார் அபகரித்தார்? ஏன் அபகரித்தார்? என்பவை பற்றி அவனுக்குக் கவலை இல்லை. அபகரித்தலாகிய நிகழ்ச்சி நடைபெற யார் யார் காரணர்? கைகேயி, தசரதன், பரதன் என்ற மூவருமே”