பக்கம்:தம்பியர் இருவர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் Ꮾ ?

என அவன் நினைக்கின்றான். அவனுடைய ஆத்திரத்தில் பரதன் அயோத்தியில் இல்லை என்பதும், அவன் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டிருக்க இயலாது என்பதும் அறிவில் படவில்லை. போர் முழக்கம் செய்துகொண்டு புறப்பட்டுவிட்டான். ஏன் தெரியுமா? இராமன் இழந்த முடியை அவனுக்கு மீட்டுத் தரவாம். சினங்கொண்ட இலக்குவன் என்ன என்ன பேசுகிறான், நாவில் நரம்பின்றி. ஏசுகிறான் அனைவரையும்!

இராமனுக்குரிய அரசைப் பரதனுக்குத் தருவது சிங்கக்குட்டிக்கு என்று வைத்திருக்கும் இனிய சுவையுடைய ஊனை நாய்க்குட்டிக்கு இடுவது போன்றதாம். இக் கருத்துப்பட இலக்குவன் இதோ பேசுகிறான்.

“சிங்கக் குருளைக்குஇடும் தீஞ்சுவை ஊனை நாயின் வெங்கண் சிறுகுட்டனை ஊட்ட விரும்பி னளால்!”

(கம்பன்-17.18)

இப்பாடலில் பரதனை ‘நாய்க்குட்டி’ என்று. இலக்குவன் எள்ளிப் பேசுவதைக் காணலாம். இலக்குவ னைப் பொறுத்தவரை இராமன், பரதன் ஆகிய இருவருமே மூத்தவர்தாம். என்றாலும், இராமனுக்குரிய அரசைக் கைகேயி பரதனுக்குப் பெற்றுவிட்டாள் என்று அறிந்த வுடன் இலக்குவன் சீற்றத்தால் இவ்வாறு பேசிவிட்டான். இராமனுடைய முடியைக் கவர்வதற்குச் செய்யப்பட்ட சூழ்ச்சியில் பரதன் நேரடியாகப் பங்கு கொண்டுள்ளானா என்பதை அறியாதிருக்கையிற்கூட இலக்குவன் பரதனை "நாய்க்குட்டி என்று ஏசிவிட்டான். ஆனால், இதே நேரத் தில் முடியை இழந்து நிற்கும் இராமன் பரதனைப் பற்றி இதோ பேசுகிறான். இலக்குவன் சீற்றத்தை அடக்கும் முறையில் இராமன், ஐயனே, மயக்கம் இல்லாத சன்மார்க் கத்தில் வாழும் தம்பியாகிய பரதனைப் போரில் தொலைத்தா உன் சீற்றம் அடங்கவேண்டும்?' என்ற கருத்தில் கூறுகிறான்: -