பக்கம்:தம்பியர் இருவர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 தம்பியர் இருவர்

வோம். உள்ளமும் கோடிய கொடியாள்’ என்று கவிஞன் அவளைக் குறிப்பிடுகிறான். உள்ளமும் என்ற சொல்லில் காணப்பெறும் 'உம்' மை அவள் புற உடலும் அழகற்றுக் கூனலாய் வெறுக்கத்தக்கதாய் உளது என்பதைக் குறிக்கிற தன்றோ? அதேபோன்று, ஒவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்' என்று இராமனை வாலி விளிக்கிறான். இத். துணைப் புற அழகுடைய இராமன் அக அழகும் உடையவ னாய் இருப்பதையும் அறிகிறோம். இவ்விருவரும் கவிஞ. னுடைய படைப்புக்களே. இனி இச்சட்டத்திற்கு மாறாக வும் படைக்கப்படலாம். கைகேயி மிக்க அழகுடையவள் என அவளுடைய பகைவருங்கூடப் பேசுகின்றனர். தசரதன் அவளுக்கு அடிமையானதே அவளுடைய புற அழகைக் கண்டு மயங்கித்தானே? இத்துணை அழகிய அப்பெருமாட்டி-அரசரிற்பிறந்து, அரசரிற்புகுந்து, பேர ரசியான-அவள் இறுதியில் தீய பண்பு உடையளானா ளன்றோ? அழகெல்லாம் திரண்டு ஒர் உருவாய் அமைந்த கைகேயி இவ்வாறு தீயவள். ஆனாள் என்ற காரணத்தால், அழகுடையவர் அனைவருமே தீயவர் என்ற முடிவுக்கு வருதல் நேரிதா? புற அழகு ஒரளவு மனப்பண்பைக் காட்டுவது உண்மையே எனினும், இதற்கும் புறநடைகள் மிகுதியும் உண்டு என்பதை மனத்தில் இருத்த வேண்டும்.

இந்த அடிப்படையில் கம்ப நாடன் கலைக் கோயிலிற் காணப்பெறும் குகன்' என்ற பாத்திரத்தைக் காண்டல் வேண்டும். ஒரு வகையான முரண்' (Contrast) அணியுடன் கவிஞன் குகனை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறான். கங்கைக் கரையில் இராமன் வனம் புகு கோலத்துடன் வந்து தங்கியுள்ளான். அவனைச் சுற்றிலும் முனிவர்களும், யோகிகளும், அந்தணர்களும் நிறைந்துள்ளார்கள். புறத் தூய்மை அகத் தூய்மைகளுடன் இருக்கிறார்கள் அப்பெரி யவர்கள். அவர்களுடைய முகத்துய்மை போலவே அவரி கள் தங்கியுள்ள இடமும் தூய்மையாய் விளங்குகிறது. வழி பாடு செய்கின்ற இடம் நறுமணத்துடன் திகழ்வது போல,