பக்கம்:தம்பியர் இருவர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 3

இராமன் தங்கியுள்ள இடமும் நறுமணத்துடன் விளங்கு கிறது. திடீரென்று அந்த இடத்தில் மீன்நாற்றம் வீசுகிறது. தவசிகள் கூடிய கூட்டத்தில் எவ்வாறு மீன் நாற்றம் வீச முடியும்? அனைவரும் திரும்பிப் பார்க்கின்றனர் வியப் புடன். இலக்குவன்மிக்க பணிவுடன் வந்து நின்று வாய் புதைத்துப் பேச முற்படுகிறான். அண்ணலே, கங்கையில் படகோட்டும் வேடர்கட்கெல்லாம் இறைவனான குகன் என்பவன் பெருங் கூட்டமான சுற்றத்தாருடன் வந்துள் ளான். அவன் உள்ளம் தூயவன்; தாயைக்காட்டிலும் நல்லவன்: உனது காட்சிக்காக வெளியே காத்து நிற்கி றான்.’’ என்று கூறுகிறான். * -

நிற்றிஈண் டென்று புக்கு கெடியவற் றொழுது தம்பி கொற்றவ! மின்னைக் காணக் குறுகினன் கிர்மிங்த

- கூட்டச் சுற்றமும் தானும் உள்ளம் தூயவன் தாயின் கல்லான் எற்றுர்ேக் கங்கை காவாய்க்கு இறைகுகன் ஒருவன்’

என்றான். (கம்பன்-1964)

அப்பொழுதுதான் புதியவனாய் வந்துள்ளான் குகன். இலக்குவனை அவன் முன் பின் பார்த்ததில்லை. இருவரும் முதன்முறையாக இப்பொழுதுதான் சந்தித்தனர். இலக்கு வன் குகனிடம் பேசியவை இரண்டே சொற்கள். நீ யார்? என்பனவே அச் சொற்கள். இவ்வினாவிற்குக் குகன் கூறிய விடையும் சுருக்கமானதே. தேவா! நின்னைச் சேவிக்க வந்தனன், நாவாய் வேட்டுவன் நாயடியேன்,' என் றான். (1962) இ வ் வார் த் ைத க ளு டன் குகன் வந்திருப்பதை அறிவிக்க இராமனிடம் சென்றுவிட்டான் இலக்குவன். குகனிடம் இரண்டே சொற்கள் பேசியிருப் பினும், அவனைச் சில வினாடிகளே பார்த்திருப்பினும், அறிவாற்றல் மிக்க இலக்குவன் குகனை அளந்துவிட்டான்: முதற் பார்வையிலேயே குகன் தாயினும் நல்லவன் என்ற முடிபுக்கு வந்துவிட்டான். இலக்குவனுடைய கூர்மையான