பக்கம்:தம்பியர் இருவர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தம்பியர் இருவர்

அறிவாற்றலுக்கு இதுவும் ஒர் எடுத்துக்காட்டாகும். குகனைப்பற்றி இலக்குவன் கொண்ட இந்த (LDL}-l-I எத்துணை உண்மையானது என்பதைப் பின்னரும் காணலாம். இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், குகன் வந்திருக்கும் நிலைமைக்கும், அவன் வந்துள்ள இடத்திற் கும் சிறிதும் பொருத்தமே இல்லை. மீன் நாற்றம் மூக்கைத் துளைக்கிறது, அவன் சென்ற இடமெல்லாம். போதாக் குறைக்குப் பக்குவம் செய்த மீன் உணவையும் கையில் கொண்டுவந்துள்ளான். ஏன் தெரியுமா? தன் தலைவ னாகிய இராமனுக்குக் காணிக்கையாம், பக்குவப்படுத்தப் பெற்ற மீனும் தேனும் முனிவர்கள் தங்கியுள்ள பர்ன சாலைக்கு அணித்தேயும் கொண்டு வரக்கூடிய பொருளா பlன் ? ஆனாலும், அதைப்பற்றிக் கடுகளவும் கவலைப் படாமல் கொண்டு வந்துவிட்டான் அத்தாயினும் நல்லா னாகிய நாவாய் வேட்டுவன். இலக்குவனே வந்திருப் பவனை உள்ளம் துர்யான் என்றும் தாயினும் நல்லான் என்றும் கூறிய பிறகு இராமன் அதுபற்றி அறிய வேண்டு வது யாது? ஒன்றுமின்று அன்றோ? எனவே, இராமன் அவனை உடனே உள்ளே அழைத்து வருமாறு பணிக் கிறான்.

இதோ: குகன் உள்ளே வந்து இராமனை விழுந்து வணங்கிவிட்டு, வாய்புதைத்து நிற்கிறான். சுற்றிலும் உள்ள முனிவர் பெருமக்கள் அவனை வெறித்து நோக்கு கிறார்கள். அவனது புறத் தோற்றம் அவ்வளவு வெறுப்பை உண்டாக்குவதாய் இருக்கிறது. மிக நல்ல உயரம் உடைய வனாய் நிற்கிறான் குகன். நல்ல கறுப்பு நிறம். மையை உடல் முழுவதும் பூசினாற்போல இருக்கிறது. நான் ஏற்றப் பெற்ற வில் இடத்தோளில் தொங்கிய அடையாளம் இருக்கிறது. அவ்வளவு பெரிய வில் தொங்கு வதற்கு ஏற்றது அவனுடைய மலை போன்று திரண்ட தோள். கையில் துடி ஒன்றும் இருக்கிறது. இப்பொழுது ஆவனுடைய கால்களில் செருப்பு இல்லையாயினும், தேர்ந்