பக்கம்:தம்பியர் இருவர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 5.

செருப்பின் அடையாளம் அவனுடைய பாதங்களில் அழுந்தி யிருக்கிறது. அவன் புறப்படும் பொழுது ஒலிக்கும் வாத்தி யங்கள்கூட அச்சத்தை விளைக்கும் கொம்பு பறை முதலியனவாகும். பம்பை முதலிய சில வாத்தியங்கள் அவன் இடையைச் சுற்றியுள்ளன.

அவன் க்ாழம்' என்ற பெயரை உடைய அரைக்காற். சட்டையை அணிந்துள்ளான். அதன் இடையிலிருந்து கால் வரை ஒரு புலியின் வால் தொங்கிக் கொண்டிருக்கிறது. உடையை இறுக்குவதற்கும் புலி வாலையே கச்சையாகக் கட்டியுள்ளான். அவன் அணிந்திருக்கிற ஆபரணங்கள் உடையைக் காட்டிலும் விசித்திரமானவை. பற்களை ஒழுங்குறத் தொடுத்தாற்போன்று பலகறை(சோழி)களால் தொடுக்கப் பெற்ற மாலையை அணிந்துள்ளான். அவனுடைய கால்களைப் பார்த்தால், இவை கற்களோ!' என்னும் ஐயம் தோன்றும். ஆண் மக்களுடைய தலை மயிர் கறுப்பு நிறம் உடையதாகவேதான் இருக்கும். ஆனாலும், குகனுடைய தலையில் இருள் கவிந்திருப்பது போன்ற கரு நிறம் தங்கியிருக்கிறது. இந்த அழகான தலை மயிரில் இறகு வைத்து அலங்காரம் செய்து கொள்வதுபோல முற்றி யுள்ள ஒரு நெற்கதிரைச் செருகியுள்ளான்.

அவனுடைய கைகளே பார்ப்பதற்கு வேடிக்கையாய் உள்ளன. கமலம் என்று கூறத்தக்க கைகளையுடைய இராமபிரான் பக்கத்தில் நிற்கும் குகனுடைய கைளைப் பாருங்கள்! இராமனுடைய கையைப் பார்த்தால், தாமரை மலர் நினைவுக்கு வரும். குகனுடைய கையைப் பார்க்கும் பொழுது பனைமரத்தைப் பார்க்கும் எண்ணந்தான் தோன்றும். ஏன் தெரியுமா? பனை மரத்தில் வலிமையான சிறாம்புகள் மேல் நோக்கி வரிவரியாய் இருக்கக் காண் கிறோமல்லவா? அதே போல முழங்கைப் பகுதியெல்லாம் வலிமையான மயிர் கீழ் நோக்கித் தடித்து வளர்ந்திருந்தவி னால் அந்தக் கையைப் பார்க்கும் பொழுதும் பனை மரத் தின் நினைவு உண்டாகிறது. பிற வீரர்களுடைய மார்பைக்