பக்கம்:தம்பியர் இருவர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தம்பியர் இருவர்

"கல் போன்ற மார்பு என்று கூறுவது மரபு. ஆனால், குகனுடைய மார்பைக்கூற வந்த கம்பநாடனுக்கு அந்த உவமை சரியானதாகத் தெரியவில்லை. எனவே, கூறும் முறையை மாற்றி விட்டான் கண் அகன் தடமார்பு எனும் கல்லினன்' என்று கூறிவிட்டான். அதாவது, மார்பு என்ற பெயருடன் மார்பு இருக்க வேண்டிய இடத்தில் கல் இருந்தது என்று கூறுமுகத்தான் கம்பன் நம்முடைய மனத் தில் ஒரு தனி மதிப்பை உண்டாக்கிவிட்டான். எவ்வளவு தான் கல் போன்ற தோள்கள்’ என்று கூறினாலும், ஏனையோர் தோள்களைப்போல இவையும் வலிமையான தோள்கள் என்ற பொருள் கிடைக்குமே தவிர, குகனுடைய தோள்களுக்கு என்று தனி மதிப்புக் கிடைக்காது. எனவே, கவிஞன் இப்புது வழியைக் கையாண்டு, மார்பு எனும் கல்லினான்’ என்று உவமையை உருவகமாக்கி நம் மனத்தில் குகனுடைய மார்புக்கு ஒரு தனி மதிப்பைப் பெற்றுத் தந்து விட்டான். இந்த மார்பைத் தாங்கும் குகனது இடுப்பு இன்னுஞ் சற்றுக் காண்டற்குரியது. உண்டோ!' என்று ஐயுறும்படியான இடையை உடைய சீதை இருக்கும் அதே பர்ணசாலையில் இதோ குகனும் நிற்கிறான்! அவனுடைய இடையைப் பார்த்தவுடன் நாம் காணாததும், ஆனால் அதிகம் கேள்வியுற்றதுமான இந்திரனுடைய வச்சிரா யுதம் நம் நினைவிற்கு வருகிறது. அவனுடைய இடையில் கட்டிய வாளில் இரத்தக் கறை படிந்திருக்கிறது. அதைத் துடைத்துத் துாய்மையாக வைத்துக் கொளள வேண்டும் என்ற எண்ணங்கூட அவனுக்கு இல்லை போலும்!

இவை அனைத்துமே அவ்வளவு விரும்பத் தக்கன அல்ல என்பது தெளிவு. என்றாலும், ஒரு மனிதனுடைய கண்களைக் கொண்டு அவனைப் பற்றி முடிபு செய்யலாம். இத்தனைபுறத் தோற்றமும் நன்றாய் இல்லை என்றாலும், அவனுடை பார்வையாவது குளிர்ந்ததாய் இருக்குமா என்றால், விடமுடைய பாம்புகளும் நடுங்கும் பார்வை உடையவன் என்று கூறப்படுகிறான். நச்சு அராவும்