பக்கம்:தம்பியர் இருவர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 7.

நடுக்குறு நோக்கினான்’ என்று கவிஞன் கூறி முடிக்கும் பொழுது குகனைப் பற்றிய முழு வடிவமும் நம் கண்முன் தோன்றி விடுகிறது. இன்னும் ஒன்றே ஒன்றுதான் எஞ்சி யுளது. அதாவது, இத்தகைய புறக்கோலம் உடையவன் எவ்வாறு பேசுவானோ!' என்று நாம் ஐயுறுவோம் அல்லவா? இதோ கவிஞன் விடை கூறுகிறான். பைத்தியக் காரனைப்போல முன்னுக்குப் பின் தொடர்பில்லாத சொற்களைப் பேசுகின்றான் என்ற கருத்தில் பிச்சராம் அன்ன பேச்சினன்' என்றே கூறுகிறான்.

இத்துணையும் போதாவிடில் அவன் அணிமையில் இருக்கும்பொழுது உண்டாகும் தீய நாற்றம் உறுதியாகவே வெறுப்பை விளக்கும். ஊனையும் மீனையுமே மிகுதியும் உண்பதால் அவற்றின் நாற்றமும் அவனுடனேயே வரு கிறது. இத்துணை வெறுக்கத் தக்கவை இருந்தும், அவனுடைய முகத்தில் ஒரளவு புன்சிரிப்பாவது இருக்கு மாயின், இப்வெறுப்பை மாற்றும் எனலாம். அதற்கும் இடம் தாராதபடி அவனுடைய முகத்தில் சிறிதும் புன் முறுவல் இல்லையாம். அது மட்டுமா? சீற்றம் இன்றியும் தியெழ நோக்குகின்றனாம்! எப்படி இருக்கும் அத் தோற்றம்? கோபம் இல்லா நேரத்திலுங்கூடத் தீயெழ நோக்கும் பழக்கத்தைப் பெற்று விட்டான் போலும்! வாய் திறந்து பேசத் தொடங்கி விட்டால்தான் எத்துணை இனிமையான குரல்! தென்திசைக் கோனாகிய எமதர் மனும் அஞ்சும்படியான இடிக்குரலுடன் பேசுகிறான். இத்தகைய வடிவழகுடன் விளங்கும் குகன், கங்கைக் கரை யில் இருக்கும் சிருங்கிபேரம்' என்னும் நகரத்தைத் தலை நகராகக் கொண்டு, அதனைச் சுற்றியுள்ள பகுதியை ஆட்சி செய்கிறான்; பெரியவனாகிய இராமனைக் காண வரும்பொழுது காணிக்கைப் பொருளாக மீனையும் தேனையும் கொண்டு வந்துள்ான்!

இத்தகைய வடிவையும் குரலையும் உடைய குகனை இலக்குவன் சில வினாடிகளே கண்டான்; இரண்டொரு.