பக்கம்:தம்பியர் இருவர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 75

வே ண் டா. பகுத்தறிவுடைய மனிதரிடங்கூட இவ் வொற்றுமை காணவில்லையே! என்பானாகிப் பரதனைப் பற்றிப் பேசுகிறான்.

“எத்தா யர் வயிற் றினும்பின்பிறந் தார்கள் எல்லாம்

ஒத்தாற் பரதன் பெரிது உத்தமன் ஆவது உண்டோ **

(கம்பன்-3977)

எனவே, பரதன்மேல் இராமன் கொண்ட அன்பு இணை யற்றது.

கூப்பிய கையொடு மட்டும் வரவில்லை பரதன். 'அறத்தை மறந்தாய்! மனிதருக்கு மிகவும் தேவையான கருணையையும் மறந்துவிட்டாய்! அரசனுக்கு மிகுதியும் வேண்டப்படுவதாய நீதியையும் நீத்துவிட்டாய்!” என்று இராமனைப் பார்த்துக் கூறிக்கொண்டே வந்தான் அப் பரத வள்ளல். வந்தவன் அவன் திருவடிகளில் வீழ்ந்து விட்டான். உண்டுகொல் உயிர் என ஒடுங்கி இருக்கும் அவனைப் புனல் சொரி கண்களால் கண்டான் புண்டரிகக் கண் புரவலனாம் இராமபிரான். தன்னைப் பிரிந்த பரதன் எவ்வாறு வருந்துவான் என்பதை நன்கு அறிந்துதான் இருந்தான் இராமன். ஆனால், அவ்வளவு அறிந்திருந்த இராமனையும் மருட்டிவிட்ட ஒன்று பரதனிடம் இருந்தது. அதுவே அவனுடைய தவக்கோலம். தன்னை அழைப்பதற் காகவே பரதன் வந்துள்ளான் என்பதை இராமன் அறிவான். ஆனால், இவ்வாறு தவக்கோலம் கொள்ளக் காரணம் யாது? இராமனுக்கும் புரியாத புதிராய் இருந்தது பரதனுடைய இக்கோலம். இவ்வேடத்தைப் பன்முறையும் பார்க்கிறான் இராமன். புல்வினன் நின்று அவன் புனைந்த வேடத்தைப் பன்முறை நோக்கினன்' (56) என்றதால், பரதன் கொண்ட இக்கோலம் இராமனும் எதிர்பாராத ஒன்று என்பதை அறிய முடிகிறது. இருவரும் பேசிக் கொள்ளும் பொழுதுதான் தசரதன் இறந்த செய்தியை இராமன் அறிய முடிகிறது. இதன் பின்னரே பன்னசாலையி