பக்கம்:தம்பியர் இருவர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தம்பியர் இருவர்

வருவது; மற்றொன்று, கரை உடைத்துக் கொண்டு வரும் பொழுதும் ஆரவாரம் இல்லாமல் வெளிவருவது. கமலக் கண்ணனுடைய கண்கள் பரதன் வடிவைக் கண்டன. அவன் மனம் பரதன் அகமனத்தைக் கண்டு களிப்புற்றிருக் கிறது. செம்மையின் ஆணியாகிய இந்தப் பரதனைக்கூட இலக்குவன் ஐயுற்றுவிட்டானே!” என்ற எண்ணம் இராமன் மனத்தில் தோன்றியிருத்தல் வேண்டும். தன்னைப் போலவே இலக்குவனும் பரதனை வைத்த கண் வாங் காமல் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான் இராகவன். உடனே தக்க சமயத்தில் இலக்குவனுக்கு அறிவு புகட்ட வேண்டும் என்ற நினைவு வந்தது. இலக்குவனை நோக்கினான்; ஆரவாரத்தோடு கூடிய வில்லை ஏந்திய இளையோய்!” என்று விளித்தான் அவனை! தேர்ப் படையை மிகுதியும் உடைய பரதன் மிகவும் கோபத்துடன் நம் மேல் படையெடுத்து வரும் முறையை அமைதியாகவும் நன்றாகவும் பார். என்கிறான்.

'கார்ப்பொரு மேனிஅக் கண்ணன் காட்டினான்,

ஆர்ப்புறு வரிசிலை இளைய ஐய!t தேர்ப்பெருங் தானை அப் பரதன் சீறிய போர்ப்பெருங் கோலத்தைப் பொருந்த நோக்கு!’ எனா. (கம்பன்- 24 24) இராமனுடைய இந்தச் சொல் அம்பு, அஞ்சாத இலக்குவ னையும் ஒரு கலக்குக் கலக்கிவிட்டது. வீரருள் வீரனாய அவ் இலக்குவன் அழுதேவிட்டான்.

இனி மற்றொரு சந்தர்ப்பத்திலும் பரதனுடைய பெருமையை இலக்குவற்கு அறிவு கொளுத்தும் முறையில் எடுத்துக் காட்டுகிறான் இராமன். அண்ணனுக்கு எதிராகத் துணை தேடும் சுக்கிரீவனைக் கண்டு வெறுக்கிறான் அண்ணனிடம் உயிரையே வைத்திருக்கும் இலக்குவன். தன் வெறுப்பை வாய்விட்டு இராமனிடம் கூறியும்விட்டான். இந்நிலையில் இராமன் கூறுகிறான். ஐய, விலங்கினமாகிய இவர்களுள் இந்த உறவு முறை நியாயத்தை எதிர்பார்க்க