பக்கம்:தம்பியர் இருவர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 73

களிலேதான் நாம் பெரியவர்கள் கூறிய வழிகளைப் பின் பற்றுகிறோம்; அதுவே நேர்மையானது என்று கூறு கிறோம். எனவே, நல்லவர்கட்கு எது நேர்மை என்று ஐயுறவு தோன்றுமாயின், பரதன் இம்மாதிரி நிலையில் எவ்வாறு நடந்துகொள்வான் என்பதை ஆய்தல் போது மானது. அதுவே, நேர்மை எனப்படும். நேர்மை சரி யானதுதானா?” என்று அறியத்தக்க உரையாணி போன்றவன் பரதன். இதனைக் குறிக்கவே இராமன் செம்மையின் ஆணியை என்று கூறுகிறான். (ஆணி-உரை ஆணி.) -

இவ்வாறு இராமன் இலக்குவனிடம் இளவலாம் பரதனின் இயல்பை இயம்பிக் கொண்டிருக்கையில் பரதன் சேனையை நிறுத்திவிட்டுத் தம்பியுடன் வருகிறான். அவன் வரும் கோலத்தை இராமன் தாமரைக் கண்களால் காண் கிறான். பரதனைப் பார்த்த மாத்திரத்தில் துன்பத்தின் வடிவம் இதுதான்!” என்று கூறத்தக்க நிலையில் உள்ளா னாம் அப்பெருமான்.

“தொழுது உயர் கையினன் துவண்ட மேனியன்

அழுதுஅழி கண்ணினன் அவலம் ஈதுஎன எழுதிய படிவம் ஒத்து எய்து வான்தனை முழுதுணர் சிங்தையான் முடிய நோக்கினான்.”

(கம்பன்-2423)

மூத்தவன் என்ற முறையிலும், பரதனுடைய ஆரவார மற்ற அன்பின் ஆழத்தை நன்கு அறிந்தவன் என்ற முறையிலும் இராமன் பரதன் வரும் கோலத்தைக் கண்டான்-கண்ணொடு மனம் பொருந்தக் கண்டான். அவனையும் அறியாமல் இராமன் மனம், இலக்குவன் பரதன் இருவருடைய அன்பையும் ஒப்பிட்டுப் பார்க்கிறது. ஒன்று, காட்டாற்று வெள்ளம் போன்றது; ஏனையது, ஏரி நிறைந்துள்ள நீர் போன்றது. ஒன்று, அடித்துவரும் வேகத் தில் நல்லவை தீயவை என்ற இரண்டையும் அடித்து