பக்கம்:தம்பியர் இருவர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தம்பியர் இருவர்

நினைவாலும் ஆகுமே தவிர, வேறு காரணம் இருத்தல் கூடும் என்று நினைப்பதும் அறிவுடைமை ஆகுமோ?”

இவ்வாறு பரதனைப் பற்றியும் அவன் எதற்காக வருகிறான் என்பது பற்றியும் நினைக்க நினைக்க இராம னுக்குக் கருணை ஊற்றெடுக்கின்றது. பரதன் மேல். உடனே அவன் பண்பாட்டைத் தொகுத்தும். தான் அவனைப் பற்றி என்ன நினைந்துள்ளான் என்பதையும் இதோ கூறுகிறான், மிகச் சிறந்த அறக்கடவுளின் வடிவு கொண்ட வனாய பரதனை-நேர்மை என்னும் தேருக்குக் கடை யாணி போன்றவனை-அவ்வாறு நினைக்கலாமா? அவன் செய்கையை நீயே காணப் போகிறாய்!” என்ற பொருளில் கூறுகிறான்:

சேண்உயர் தருமத்தின் தேவை, செம்மையின்

ஆணியை அன்னது நினைக்க லாகுமோ? பூண் இயல் மொய்ம்பினாய்! போந்தது ஈண்டுஎனைக் காணிய; இேது பின்னும் காண்டியால்.’

- (கம்பன்-24 21)

பரதனை அறவடிவினன்' என்று கூறுகிறான் அறத்தின் நிலையமான இராமன் எனில், அதனை மறுப்பார் யாருளர்? அம்மட்டோடு நிற்கவில்லை இராமன் சூட்டும் புகழ் மாலை. நேர்மையின் உரையாணியாம் பரதன். பொன்னின் மாற்று எத்தனை என்பதை அறிய வேண்டு மாயின், மக்கள் யாது செய்கின்றார்கள்? உரைகல்லில் உரைத்துப் பார்க்கின்றார்கள் அல்லவா? அதே போல, எது நேர்மையானது என்று யாருக்காவது ஐயம் வந்துவிட்டால், என் செய்வது? பல சந்தர்ப்பங்களில் இரண்டு வழிகள் காணப்படுவதுண்டு. உலக வாழ்க்கையில் இது சாதாரண அனுபவம். இரண்டில் எது நியாயமானது என்று ஆராயத் தோன்றுகிறது. நேர்மை வழி எது?’ என்று ஐயுறத் தோன்றுகிறது. அத்தகைய சந்தர்ப்பங்களில் நேர்மை வழி எது? என்பதை அறிய முடிவதில்லை. இம்மாதிரி நிலை