பக்கம்:தம்பியர் இருவர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 7 I

முகவுரை வினா ஆய்தற்குரியது. பிறழ்ந்தார்கள் என்று இலக்குவன் விடை கூறினால் அவனும் அதில் அகப்பட்டுக் கொள்வான். ஒருவரும் பிறழ்ந்ததில்லை என்று கூறினால், * பரதன் மட்டும் எவ்வாறு பிறழ முடியும்?’ என்ற வினாத் தோன்றும். எனவே, இலக்குவன் விடை ஒன்றும் கூறாமல் நிற்கிறான்.

இப்பொழுது கோசல நாடுடை வள்ளல் ஆணித் தரமாகப் பரதனைப் பற்றிய தன் கருத்தைக் கூறுகிறான். வேதங்களும் நல்லொழுக்கத்திற்கு மேற்கோள் காட்ட வேண்டுமாயின், பரதனுடைய செய்கையையே எடுத்துக் காட்டும். நீ நினைக்கும் அவ்வளவு அற்பத்தனமான செயலைப் பரதன் நினைக்கவும் மாட்டான். ஆனால், என்மேற்கொண்ட அன்பு காரணமாக அதனை நீ அறிய முடியவில்லை”, என்னுங் கருத்துப்படப் பேசுகிறான்:

'எனைத்துஉள மறை அவை இயம்பற் பாலன பனைத்திரள் கரகரிப் பரதன் செய்கையே அனைத்திறம் அல்லன வல்ல வன்.அது நினைத்திலை என்வயின் கேய நெஞ்சினால்.”

(கம்பன்-241.8)

‘உலகம் முழுவதற்கும் நீதி புகட்ட வந்த வேதங்களும் நல்லொழுக்கத்திற்கு மேற்கோள் காட்டப் பரதனுடைய செயல்களையே காட்டும் எனில், பரதனுடைய பண்பாட் டிற்கு இதனினும் சான்று வேண்டுமா?

'பெருமகன் என்வயின் பிறந்த காதலின்

வரும்என கினைகையும் மண்ணை என்வயின் தரும் என நினைகையும் தவிரத் தானையால் பொரும்என கினைகையும் புலமைப் பாலதோ?”

(கம்பன்-2419)

‘பரதன் இவண் வருகிறான் என்றால், என்பாற் கொண்ட காதலாலும், அரசை மீட்டும் எனக்குத் தரவேண்டும் என்ற