பக்கம்:தம்பியர் இருவர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 தம்பியர் இருவர்

பெரும்படை உடன் வருவதால் கடல் எழுந்து வருவது போல உள்ள அக்காட்சியை எப்பொழுதும் காவல் புரிபவ னாகிய சுமித்திரை சிங்கம் கண்டுவிட்டான். அறிவிலும் வீரத்திலும் ஒப்புயர்வற்றனாகிய இலக்குவன், மீட்டும் ஒருமுறை தவறு செய்கிறான்; பரதன் தான் நிலத்தைத் தனக்கே ஆக்கிக்கொள்ளும் எண்ணத்தால் இப்பெரும்படை யுடன் இர்ாகவனை எதிர்க்க வந்துள்ளான். இது உறுதி , என்று கூறிக்கொள்கிறான். பரதன் இப்படைகொடு பார் கொண்டு ஆள்வது, கருதி............ வந்தான்; இது சரதம்' என்று அவன் ஒரு முடிபுக்கு வந்துவிட்டான்', ஐயப்படக் கூட இல்லை; ஒரே ஒட்டமாக ஒடி இராமனிடம் 'மதித்திலன் பரதன் நின்மேல் வந்தான்”, என்று கூறி விட்டுப் போருக்குத் தயாராகிவிட்டான்; நான் எவ்வாறா யினும் பரதனையும் அவன் படைகளையும் வென்றுவிடப் போகிறேன்”, என்கின்றான். இராமன் பாடு மிகவும் தரும சங்கடமாகிறது. எனவே, அவன் இலக்குவனை உயர்த்திப் பேசத் தொடங்குசிறான்.

'இலக்குவ! உலகம் ஓர் ஏழும் ஏழும்ே

"கலக்குவன்’ என்பது கருதி னால்அது

விலக்குவது அரிது; அது விளம்பல் வேண்டுமோ? புலக்குஉரித்து ஒருபொருள் புகலக் கேட்டியால்.’

(கம்பன்-2416) (புலக்கு உரித்து ஒரு பொருள்-அறிவுக்கு ஏற்றதொரு செய்தியை)

'கம்குலத்து உதித்தவர் நவையுள் நீங்கினார் எங்குஉலப்பு உறுவர்கள் எண்ணின் யாவரே தம்குலத்து ஒருவுஅரு தருமம் நீங்கினார்?’’

(கம்பன்-2417) இவ்வாறு மிக அழகான முறையில் இராமனுடைய வாதம் தொடங்குகிறது. இலக்குவ! நம் குலத்து உதித்த மன்னருள் யாரேனும் அறம் பிறழ்ந்ததுண்டா?' என்ற