பக்கம்:தம்பியர் இருவர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 69

'ஆயிரம் ஆயிரம் பேர்கள் கூடி

அவனுடைய ஆணை சிரமேற் கொண்டு கடல்கிலம் காடுகள் கடந்தும் கதுமென அவனுடைய ஆணை வழிகின்று ஒழுகுவர்; இருந்த இடத்தில் கின்றும் கிடந்தும் கலியாது இருப்பவர் தாமும் அவனுடைக் குற்றே வல்தனைக் கொள்பவர் அலரோ?”

(அவன்-இறைவன், சலியாது-அசையாமல்)

பரதனுடைய இராம பத்தி இலக்குவன் பத்தியைவிடக் குறைந்ததன்று என்பதை இலக்குவன் அறியாவிடினும், இராமன் நன்கு அறிந்திருந்தானாகலின், சமயம் வந்த பொழுது இலக்குவன் மனம் நோவாதபடி அதனை எடுத்துக் காட்டிவிட்டான். துணைத் தம்பி’ என்ற அந்தச் சொற்றொடரிலேதான் எவ்வளவு பொருளாழம் அமையு மாறு கூறிவிட்டான் அப்பெருமகன்!

இவ்வாறு இராமன் கூறியும் இலக்குவன் மனந்திருந்திய தாகத் தெரியவில்லை. இராமன் தடுத்து நிறுத்தியதால் அவன் கைகேயிமேல் போர் தொடுக்காமல் அடங்கி விட்டானே தவிரப் பரதன்மேற்கொண்ட தவறான எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

சித்திரகூட மலையை அடுத்த ஓர் இடத்தில் இலக்குவன் கையால் அமைத்த பன்னசாலையில் இராம னும் சீதையும் இலக்குவனும் தங்கி வாழ்கின்றனர். கே.கய நாட்டிலிருந்து அயோத்தி மீண்ட பரதன், மன்னனைக் (இராமனை) கொணர்வான் தன் பெரும்படையுடனும் அருமைத் தாயாருடனும், குகனுடனும் வருகிறான்.

1. is kindly; thousands at His bidding speed

And post o'er land and ocean without rest, They also serve who only stand and wait.

—Sonnet 'On His Blindness” by J. Milton