பக்கம்:தம்பியர் இருவர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 77

பரதன் மாட்டு இலக்குவனும் பேரன்பு கொண்டிருந்தானா யினும், இதனால் பரதனுடைய வன்மையை அவன் மறந்து விடவில்லை. மேலும், இராமனுக்கு இளையவன் பரதனாக லின், அவனை இன்னும் குழந்தையாகவே கருதுகிறான் இராமன். மேலும், அரசாட்சியை விட்டு நந்திக்கிராமத்தில் தவம் புரியும் பரதன் எவ்வாறு மாயம் வல்ல இந்திர சித்தனை எதிர்த்து நிற்க முடியும்? இராமனுடைய கண் முன்னர்ப் பரதன் குழந்தையாகவே இருக்கிறான்; எனவே, அயோத்திக்கு விரைந்து செல்ல வழி தேடுகிறான். ஒரு காலத்தில் பரதனை வெறுத்துப் பேசிய இலக்குவன், இதோ இப்பொழுது பேசுகிறான். ஐயனே, பரதனைப் போரில் வென்று பிணிக்க இவ்விந்திரசித்தனால் இயலாது. பரதன் போர்க்களம் செல்வானாயின், மூவுலகும் தீய்ந்து விடாவோ?’ என்ற கருத்தில் பேசுகிறான்.

'அவ்விடத்து இளவல், ஐய! பரதனை அமரின் ஆர்க்க எவ்விடற்கு உரியான் போன இந்திர சித்தே அன்று தெவ்விடத்து அமைவின் மும்மை உலகமும் தீய்ந்து - . . அறவோ?’’ (கம்பன்-2089).

இம்மட்டோடு நிற்கவில்லை இலக்குவன். இந்திர சித்தனுடைய பிரமாத்திரம் என்னும் பாசத்தால் கட்டுண்ட தன்னைப் பரதனுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கூறுகிறான்; 'யான் கட்டுண்டு வீழ்ந்துவிட்டது போலப் பரதனும் வீழ்வானா? ஒருநாளும் அது நடைபெறாது!’ எனக் கூறுகிறான். -

"தீக்கொண்ட வஞ்சன் வீசத் திசைமுகன் பாசந் தீண்ட

விக்கொண்டு வீழ யானோ பரதனும்? வெய்ய கூற்றைக் கூக்கொண்டு குத்துண்டு அன்னான் குலத்தொடு

நிலத்தன் ஆதல்' (கம்பன்-8921)