பக்கம்:தம்பியர் இருவர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 தம்பியர் இருவர்

சென்று காண்டாய்” என்கிறான். பரதன் எப்பொழுது யாருடன் போரிட்டதை இலக்குவன் கண்டான்? பரதன் யாருடனும் போரிட்டதை யாருமே கண்டதில்லை. அவ்வாறு இருக்கப் பரதன் பிரமாத்திரத்தாலும் கட் டுண்ணமாட்டான்,' என்று இலக்குவன் கூற ஆதாரம் யாது? தூய வீரனாகிய இலக்குவன், பரதன் போர் புரியா விட்டாலும் ஆற்றல் மிக்கவன் என்பதை அறிந்திருந்தான்; தானும், ஆற்றல் மிக்கவனாய் இருந்தும், தவ வலிமை இன்மையாலும், படபடப்பு உடைமையாலும் பிரமாத் திரத்தின் எதிரே நிற்கமுடியவில்லை என்பதை இப்பொழுது உணர்ந்துவிட்டான். பரதனுக்கும் தன்னை யொத்த வலிமையுண்டு. இதனினும் மேலாக, அவனிடம் தவ வலிமையும் சேர்ந்துவிட்டதன்றோ? எனவே, பரதனுடைய வலிமையைக் கணக்கிட்டே அவனை வெல்ல இந்திரசித்த னால் முறியாது எனக் கூறுகிறான் இளையவன்.

இதனையடுத்து இவ்விருவரையும் மீட்சிப் படலத்தில் சந்திக்கிறோம். இராமன் வருவதற்கு முன்னர்ப் பரதன் செய்த செயல்கள் பின்னர் ஆயப்படும். அவை அனைத்தும் திர்ந்து இராமன் வந்தவுடன் பரதன் அவனை வணங்கு கிறான்.

‘பூவடி பணிந்து வீழ்ந்த பரதனைப் பொருமி விம்மி

காவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன் கின்ற நம்பி ஆவியும் உடலும் ஒன்றத் தழுவினான் -

அழுதுசோர்வான்' (கம்பன்- 0.278)

இராமன் பரதனது அன்பென்னும் சுழியிலகப்பட்டுப் பேச்சற்றுவிட்டான். உணர்ச்சியின் உச்ச நிலையில் சோதரர் இருவரும் ஆறத் தழுவி நிற்கும் பொழுது பேச்சுக்கு இடமேது? இராமன்-தன் உணர்ச்சிகளை நன்கு அடக்கப் பழகியிருந்த இராமன்-இப்பொழுது தம்பியைத் தழுவி நின்று விட்டான். அவன் கண்ணிர் மட்டும் ஆறாய்ப்