பக்கம்:தம்பியர் இருவர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 79

பாய்கிறது. ஆம்! இளமையுடைய பரதன் உருவத்திற்கு ஏலாத தவக்கோலம் கொண்டு சடைமுடியைச் சேர்த்துக் கட்டி இருக்கிறானல்லவா? எத்தனை ஆண்டுகளாய் வளர்த்த முடி அது! அது நீரால் நனைத்துத் தூய்மைப் படுத்தப்படாமல் புழுதி படிந்தல்லவா இருக்கிறது! அப் புழுதியை இப்பொழுது இராமன் தன் கண்ணிரால் தூய்மைப்படுத்துகிறான். எத்தனை புண்ணிய நதிகளில் ஆடினாலும் தூய்மை அடையாத சடைமுடியை அன்புக் கண்ணிர் தூய்மைப்படுத்துகிறது. இறைவனும் விரும்புவது இந்த அன்புக் கண்ணிரை அன்றோ?

' என்பாவும் ஆறுகடல் ஏழுஇருந்தும் என்அன்னை -

அன்பாளர் கண் அருவி ஆடுவது திருவுள்ளம்.”

(பாசவதைப் பரணி-184)

என்னும் இக்கூற்றை மெய்ப்பிப்பான் போல இராமபிரான் பரதனது சடையைக் கண்ணிரால் தூயதாக்கினானாம்.

'மாசுண்ட சடையின் மாலை கழுவினன்.” (10279)

இதுகாறுங் கூறியவற்றால் இராமனும் இலக்குவனும் பரதனைப்பற்றிக் கொண்டிருந்த கருத்தையும் அன்பையும் ஒருவாறு கண்டோம். - •

குகன் கண்ட பரதன்

இனி அடுத்துக் காண வேண்டுவது, உடன் பிறவாத சோதரனாகிய குகன், பரதனைப்பற்றி என்ன நினைந் தான்?’ என்பதாகும். இப்பகுதி குகனைப்ப்ற்றிப் பேசும் முதற்கட்டுரையில் விரிவாக ஆயப்பட்டிருக்கிறது. என் றாலும், பரதன் குகனிடம் உரையாடிய சில பகுதிகளை ஆழ்ந்து காண்டல் வேண்டும். -

பரதனை நேரே காணுமுன்னர்க் குகன் ப்ரதனைப் பற்றிய மிக இழிவான எண்ணம் கொண்டிருந்தான் என்பது முன்னரே பேசப்பட்டது. ஆனால் தூரத்தே கண்ட பொழுதே தன் எண்ணம் எவ்வளவு தவறானது என்பதைக்