பக்கம்:தம்பியர் இருவர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86) தம்பியர் இருவர்

கண்டுகொண்டான். உடனே அவனது மனம் இராமனது குடிப் பெருமையை நினைக்கிறது.

‘எம்பெருமான் பின்பிறந்தார் இழைப்பரோ

பிழைப்பு?’ என்றான். (2832)

இக்கருத்துடன் பரதனிடம் அவன் வரவும் பரதன் அவனை வீழ்ந்து வணங்கவும் குகனும் வீழ்ந்து வணங்கினான். உடனே அவனையும் மீறிப் பரதன் (படையுடன்) வந்திருக்கும் காரணத்தை அறிய விரும்புகிறான். ஏன் இவ்வாறு புறப்பட்டாய்?’ என்ற குகனது வினாவிற்குப் பரதன் கூறும் விடை ஆய்தற்குரியது.

"முழுதுஉலகு அளித்த தங்தை முந்தையோர்

முறையினின்றும் வழுவினன் அதனை நீக்கி மன்னனைக் கொணர்வான்'

என்றான். (கம்பன்-2325)

பரதனைக் காணு முன்னர் அரசர்களைப் பற்றியே ஒரு கருத்தைக் குகன் வெளியிட்டான் அல்லனோ?

'பாவமும் கின்ற பெரும்பழி யும்பகை கண்போடும்

ஏவமும் என்பவை மண்உலகு ஆள்பவர் எண்ணாரோ?” (கம்பன்-2391)

என்று குகன் நினைத்ததற்கும், தன் சுற்றத்தாரை நோக்கிக் கூறியதற்கும் விடை கூறுபவன் போலப் பரதன் பேசியது அறிதற்குரியது. தந்தை, முன்னோர்கள் வழியி னின்றும் தவறினான், என்று அவன் கூறுவதில் எவ்வளவு பொருளாழம் அடங்கியிருக்கிறது! முழுது உலகு அளித்த மன்னன்’ என்று கூறாமல் தந்தை' என்று குறிப்பிட்டது நினைத்து இன்புறற்குரியது. மன்னன் தவறிழைத்தால் அதனை யார் திருத்த முடியும்? மைந்தனாய் இருப்பினும் மன்னன் தவறிழைத்தான் என்று கருதிவிட்டால், திருத்த உரிமையும் வாய்ப்பும் இல்லையாய்விடும். எனவே, பரதன் மிகவும் கவனத்துடன் தந்தை' என்ற சொல்லையே பயன்