பக்கம்:தம்பியர் இருவர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 8 i

படுத்துகிறான். வழுவினன்' என்ற சொல்லும் வேண்டு மென்றே பயன்படுத்தப் பெற்றது. வழுக்கல்’ என்ற சொல்லை நாம் அறிவோம். நடந்து செல்பவன் கவனக் குறைவாக இருக்கையில் கால் வழுக்கி நிலை குலை வதையே வழுக்கி விழுந்தான்’ என்று கூறுகிறோம். அந்தப் பொருளின் மணம் வழுவினன்' என்ற சொல்லிலும் இலங்கக் காண்கிறோம். தந்தை கவனக் குறைவால் அவனையும் மீறி நிகழ்ந்த பிழை என்பான்போல் 'வழுவினன்' என்றான் பரதன். இதனைக் கேட்ட குகன் கூறியனவாய் அமைந்த பாடல்கள் பலரும் அறிந்தவைகளே.

'தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத் தீவினை என்ன நீத்துச் சிந்தனை முகத்தில் தேக்கிப் போயினை என்ற போழ்து புகழினோய்! தன்மை

- கண்டால் ஆயிரம் இராமர் கின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா!

  • என்புகழ் கின்றது ஏழை எயினனேன்! இரவி என்பான்

தன்புகழ்க் கற்றை மற்றை ஒளிகளைத் தவிர்க்குமாபோல் மன்புகழ் பெருமை நுங்கள் மரபுளோர் பெருமை எல்லாம் உன்புகழ் ஆக்கிக் கொண்டாய் உயர்குணத்து உரவுத்

- தோளாய்!” (கம்பன்-23:37, 238)

செம்மையின் ஆணி என்றும் தருமத்தின் வடிவ மென்றும் மூத்தவனாய இராமனாற் புகழப்பட்ட பரதன், இராமனின் அடுத்த @೧೧Tu೧೯TTು ಅಣಣTEು ஆயிரம் , இராமர்களும் உனக்கு ஒப்பாவதில்லை, எனறும, 'மரபுளோர் பெருமை அனைத்தையும் உனதாக்கிக் கொண் டாய், என்றும் புகழப்படுவதில் வியப்பொன்றும் இல்லை அல்லவா? -

இதனையடுத்துப் பரதன், இராமன் சென்ற திசையை நோக்கித் தொழுதுகொண்டு, எவ்வழி உறைந்தான் நம்

த.-6