பக்கம்:தம்பியர் இருவர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

2

தம்பியர் இருவர்

முன்?’ என்று உளப்பாட்டுத் தன்மைப் பன்மையில் கேட்பது அவ்வளவு குறுகிய நேரத்துள் குகனுடைய அன்பின் ஆழத்தைக் கண்டுகொண்டு இராமனைப் போலவே அவனுடன் சோதர உரிமை கொண்டு பேசு கிறான் என்பதை விளக்கி நிற்கிறது. குகன் இராமன் படுத்த இடத்தைக் காட்டியவுடன் பரத வள்ளல், பார்மிசைப் பதைத்து வீழ்ந்து, அம்மண்ணைக் கண்ணிரால் நீராட்டினான். அரண்மனையில் அனைவரும் ஏவல் கேட்ப அரச இன்பத்தில் இருக்கவேண்டிய இராமன், புழுதி படிந்த உடலுடன் காட்டில் வாழ்வதை நேரே கண்டு விட்டால், அஃது ஆறாத் துயரைத் தரும் காட்சிதான். ஆனால், அவனை நேரே காணாமலும் அவன் இருந்த தாகக் கூறப்பெற்ற இடத்தைப் பிறனொருவன் காட்டக் கண்ட மாத்திரையில் இத்துணை அன்பு பெருக வேண்டு மாயின், இது தலையாய தாயன்பாகவே இருத்தல் வேண்டும். தாயன்பு ஒன்றிற்குத்தான் பொருள் இல்லா விடத்தும் நினைவு தோன்றிய வழி அன்பு பெருகுதல் கூடும். எனவே, குகன் காட்டிய இடத்தைக் கண்ட மாத்திரத்தே பரதனுக்கு இத்துணைத் துயரம் ஊற் றெடுக்க வேண்டுமாயின், அவனுடைய பண்பட்ட மனம், தாயன்பைப்பெறும் அளவிற்குப் பண்பட்டது என்றே கொள்ளல் வேண்டும், அவ்வன்பில் ஏற்பட்ட துடிப்பினால் சொற்கள் வெளி வருகின்றன. என்னால் உனக்கு இவ் விடர் வந்ததன்றோ? கிழங்கையும் காயையும் அமிழ்து போல உண்டனை! வலிய புல்லில் துயின்றனை!’ என்றறிந்த போதும் என் உயிர் பிரியவில்லையே! மகுடஞ் குடும் செல்வத்தை அன்றோ யான் பெற்றுள்ளேன்!”

'இயன்றதுஎன் பொருட்டி னால்இவ் விடர்உனக்கு என்ற - - - போழ்தும், அயின்றனை கிழங்கும் காயும் அமிழ்துஎன! வலிய - - புல்லில்