பக்கம்:தம்பியர் இருவர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 83

துயின்றனை' எனவும் ஆவி துறந்திலேன்; சுடரும் காசு குயின்றுயர் மகுடம் சூடும் செல்வமும் கொள்வன்

யானே!’ (கம்பன்-2342)

என்றே அரற்றுகிறது அவனுடைய தாயன்பு.

இதனையடுத்து இலக்குவன் இருந்த நிலையையும், செய்த தொண்டையும் வினாவி அறிந்தவுடன், இராம னுடன் பிறந்தவர்களுள் முடிவிலாத துன்பத்துக்கு ஏது வானேன் நான்; அவன் அதைப் போக்கின. பெருமையுடை யான், என்று அரற்றுகிறான் பரதன். இலக்குவன் இராமன்மாட்டுக் கொண்ட அன்பையும் தான் கொண் டுள்ள அன்பையும் ஒப்பிட்டுப் பார்க்கிறான், ஆயிரம் இராமர்கட்கு நிகரான பரதன். அவ்வொப்புமையில் தன் அன்பு எங்கோ சென்று மறைந்து விடுவதாகத் தெரிகிறது அவனுக்கு. தாயர் மூவரையும் படகில் ஏற்றிச் செல் கின்ற குகன் கோசலையை யார் என்று வினவினவடன் பரதன் பதில் கூறுகிறான். .

'கோக்கள் வைகும் முற்றத்தான் முதல்தேவி, மூன்றுலகும் ஈன்றானை முன்ஈன் றானைப் பெற்றத்தால் பெறும்செல்வம் யான்பிறத்த

லால்துறந்த பெரியாள்’’ என்றான்.

(கம்பன்-2366)

இப்பாடலினால் பரதன்தான் பிறந்ததற்கு எத்துணை வருந்துகிறான் என்பது புலனாகிறது. தான் ஒருவன் பிறந்ததாலல்லவா கைகேயி இவ்வரங்களைக் கேட்டுப் பெருந்தீங்கு நிகழுமாறு செய்து விட்டாள்? தான் இல்லாத பொழுது நடந்ததாகலின், இப்பெரும்பிழைக்குத் தான் பொறுப்பாளியல்லன் என்று எளிமையாகத் தன் குற்றத் தைப் போக்கிக் கொள்ளலாமேனும், பரதன் அதனைச் செய்யத் துணிய இல்லை. இதுவே அவனிடம் நாம் காணும் பெரியதொரு பண்பாடாம். இனிக் கோசலைக்குக் குகனை