பக்கம்:தம்பியர் இருவர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தம்பியர் இருவர்

அறிமுகம் செய்து வைத்தலிலும் அவன் அன்புள்ளம் வெளி யாகிறது.

'இன்துணைவன் இராகவனுக்கு இலக்குவற்கும்

இளையவற்கும் எனக்கும் மூத்தான்.”

என்று கூறுகிறான். நான்கு பேர்களைக் குறிப்பிட்டுக் கூற வேண்டியிருந்தால், மூவரை முதலிற் கூறிவிட்டு இறுதியில் யானும் என்று கூறும் முறையை ஆங்கிலேயர் நமக்குக் கற்றுக்கொடுத்ததாகப் பலரும் நினைக்கின்றனர். ஆனால், தன் இளையவர்களை முதலிற் குறிப்பிட்டுவிட்டுப் பிறகே தன்னை எனக்கும் என்று குறிப்பிடும் பரதன், பண் பாட்டின் சிகரமாய் விளங்குகிறவன் அல்லனோ?

இத்துணை நற்குணம் உடைய பரதன்கூடக் கைகேயி யைக் குகனுக்கு அறிமுகம் செய்து வைக்கையில் கடுஞ் சொற்கள் பேசுகிறான். அவளை இழித்துப் பேசும் பொழுதுகூட அவன் தன்னைத்தான் மிகுதியும் இழித்துக் கொள்கிறான். படர்எலாம் படைத்தாளைப் பழிவளர்க் கும் செவிலியை' என்ற அடைமொழிகளே பரதன் கைகே யிக்குத் தந்தவை. திறக்கக்கூடாது என்று கட்டளை இடப் பட்டும் பெட்டியைத் திறந்து துன்பங்களை எல்லாம் உலாவ விட்ட பண்டோரா'வைப் போல உலகில் துன்பங் களை எல்லாம் படைத்துவிட்டாளாம் கைகேயி; மாந்தர் அனைவரும் வெறுத்து ஒதுக்க வேண்டிய பழியை’ச் செவிலித் தாயாய் இருந்து போற்றி வளர்த்தாளாம். இவை இரண்டு குற்றச்சாட்டுக்களும் முற்றிலும் பொருத்த மானவை கைகேயியைப் பொறுத்தமட்டில் என உணர் கிறோம். இதனை அடுத்த அடிகளில் பரதன் தன்னைத் தானே குறைவாகப் பேசிக்கொண்டு, அத்தகைய தன்னை உலகில் பிறப்பித்தவள் என்கிறான்.

T1. Pandora opening the forbidden box and letting out all the evils into the World.