பக்கம்:தம்பியர் இருவர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 தம்பியர் இருவர்

பொருள் கொள்வது நலமே என நினைக்க வேண்டி t{ளது.

இதனையடுத்துக் கோசலை பரதனிடம் பேசவேண்டிய நிலை மீட்சிப் படலத்தில் வருகிறது. முன்னர் நடைபெற்ற செய்திகள் நடந்து பதினான்கு ஆண்டுகள் சென்று மறைந்தன. அன்று இராமன் வரவேண்டிய நாள். மாலை வரையும் வழிமேல் விழி வைத்துக் காத்து நின்றான் அறத்தின் வடிவினனாய பரதன். இராமன் வரவில்லை. அது அவனுடைய மனத்தில் பெருந்துயரத்தை மூட்டி விட்டது. இத்தகைய ஒரு நிலை வருமாயின் யாது செய்ய வேண்டும் என்று அவன் முன்னரே முடிவு செய்து வைத்துள் ள்ான் அல்லனோ? எனவே, தம்பியாகிய சத்துருக்கினனை அழைத்தான்; அரசியலை அவன் விரும்பா விடினும் அவனிடமே ஒப்படைத்தான்; பெருந்தீ மூட்டிவிட்டான்; அதில் வீழ்ந்து தன் வாக்குறுதியை முடிக்க முற்பட்டு விட்டான். செம்மையின் ஆணி’யான பரதன் புறப்பட்டு விட்டால், யார் அவனைத் தடுக்கும் உரமுடையார்? யாவரும் அஞ்சி அரற்றி நிற்கின்றனர். பெற்ற தாயாகிய கைகேயி, பரதன் எதிரே வரவும் அஞ்சி, எங்கோ இருக்கின் றாள். என்றாலும், என்ன எந்தத் தாயைப் பரதன் உண்மையில் தாய் என்று மதித்தானோ, அந்தத் தாய்கோசலை-ஒடோடியும் வந்தாள் செய்தி அறிந்து. கடமைக்காகவே உயிர் வாழ்ந்த அக்கண்ணியன் தாயைக் கண்டும் வாளாவிருப்பானா? உடனே அவள் அடி வீழ்ந்து வணங்கினான்.

வீழ்ந்து வணங்கிய பரதனை அப்படியே தன் கைகளால் வாரி எடுத்துப் பற்றிக்கொண்டாள் கோசலை. ஐயனே, இது வரை, தசரதர் இறந்ததையும் இராமன் வனம் சென்றதையும் விதியின் செயல் என்றிருந்தேன். இராமன் குறித்த நாளில் வராமற்போனதும் அவ்விதியின் விளைவே யன்றோ? இந்நிலை உணராமல் நீ யாது செய்யத் துணிந்து விட்டாய் என் மகன்ே!” என்கிறாள். - -