பக்கம்:தம்பியர் இருவர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 9 3

இப்பொழுது இராமன் மீண்டிருந்தாலும் அவனை நீக்கிப் பரதனுக்கே முடியைத் தரும் மனநிலையில் உள்ளாள் கோசலை. எனவே, மன்னர் மன்னவா !” என்று அவள் விளித்தது உபசாரத்திற்கன்று. உண்மையில் அவள் மனத்தில் தோன்றிய ஒர் எண்ணமாகும் அது. நிறை குணத்தவன் நின்னினும் நல்லனால், என்று பரதனைப் பற்றி இராமனிடம் அவள் கூறிய சொற்களைப் பரதன் இதோ மெய்ப்பித்துவிட்டான். எனவே, அத்தாய் உளங் குளிர்ந்து அவனையே மன்னவா!' என்று விளிக்கிறாள். கைகேயி வரம் பெற்றுவிட்டதால் முறைப்படி அவனே அரசன் என்று அவள் இவ்வாறு கூறவில்லை; உண்மையி லேயே தனக்குண்டான மகிழ்ச்சி காரணமாகவே இவ்வாறு கூறினாள்.

ஆனால், அவள் எந்தக் கருத்தால் மன்னர் மன்னவா!' என்று விளித்திருப்பினும், பரதன் செவியில் அச்சொற்கள் நாராசம் போல வீழ்ந்தன. எந்த அரசப் பதவி அவனை இந்த நிலைக்குக் கொண்டு வந்ததோ, அந்த அரசப்பதவி யின் பெயரையே அவனுக்குச் சூட்டினால் அவன் வருந்தாமல் இருத்தல் கூடுமா? கைகேயி இழைத்த தவறு காரணமாகப் பரதன் விளையாட்டாகவேனும் தன்னை யாராவது அரச!” என்று விளித்தால் அழுதுவிடும் நிலையில் உள்ளான். இந்தச் சூழ்நிலையில் கோசலையே தன்னை “மன்னர் மன்னவா!' என்று அழைத்த சொற்கள் காதில் விழுந்தால், அவன் என்ன பாடு படுவான்! எனவே, அவள் கால்களில் வீழ்ந்து மீண்டும் அரற்றுகிறான். சொன்ன நீர்மையால் தொழுது மாழ்கினான், என்ற தொடருக்கு “மன்னர் மன்னவா, என்று கோசலை கூறிய சொற் களின் இயல்பை அறிந்து வருந்தினான் என்று பொருள் கொள்வதே மிகுதியும் பொருத்தம்போலத் தெரிகிறது. சொன்ன நீர்மையால்' என்பதற்கு வணங்க வேண்டிய முறைப்படி என்று பொருள் கூறிக் கம்பன் பாடலைச் சுவையற்றதாகுமாறு செய்தலினும் இவ்வாறு