பக்கம்:தம்பியர் இருவர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 தம்பியர் இருவர்

குற்றத்தை அவன்மேல் சுமத்தாமல் சுமத்தி விட்டாள் அவனை வளர்த்தெடுத்த தாயாம் கோசலை. நெருப்பை மிதித்தவன் போலத் துள்ளினான் அப்பெருமகன். கோசலையா இவ்வாறு கேட்டுவிட்டாள்? ஏன்? தன் மேலும் கோசலை ஐயங்கொள்ளும் ஒரு காலம் வந்துற்றதே என்று வருந்தினான்; அதிற் பிறந்த கோபத்துடனும் எல்லையற்ற துயரத்துடனும் தாயின் எதிரே கடுமையான வஞ்சினம் ஒன்றைக் கூறுகிறான். இருபது பாடல்களில் அவனுடைய வஞ்சினம் தொடர்கிறது. யான் இதில் பங்கு கொண்டிருப்பேனாகில் இன்னார் இன்னார் செல்கின்ற நரகங்கட்குச் செல்வேனாக!” என்று கூறி முடித்தான். இக் கொடிய வஞ்சினத்தைக் கேட்டுக் கோசலை மருண்டு. விட்டாள்.

வஞ்சினம் கூறிய பரதனை அழுத கண்ணிருடன் அப்படியே மார்புறப் புல்லிக்கொண்டாள் அத்தாய். ஆம்! சேயையும் தாயையும் பிரித்து நின்ற ஒன்று சேயின் வஞ்சினத்தால் அறுந்து வீழ்ந்துவிட்டது. விம்மலுடனும் விக்கலுடனும் மகனைத் தழுவிய தாய் இதோ பேசுகிறாள்:

'முன்னை கின்குல முதலுளோர்கள்தாம் நின்னை யாவரே நிகர்க்கு நீர்மையார்? மன்னர் மன்னவா!' என்று வாழ்த்தினாள் உன்ன உன்னருைந்து உருமி விம்முவாள்.

உன்ன உன்னருைந்து உருகும் அன்புகூர்

அன்னை தாளின்வீழ்ந்து இளைய அண்ணலும்

சொன்ன கீர்மையால் தொழுது மாழ்கினான்.

(கம்பன்-2320, 21)

(ஐயனே, உன் குலத்து முன்னர்த் தோன்றிய மன்னர் களை எல்லாம் எடுத்து நோக்கினும், உன்னை ஒத்த ஒருவனைக் காண்டல் இயலாது. மன்னர் மன்னவா,’ என்று மனங்கனிந்து வாழ்த்தினாள்.1