பக்கம்:தம்பியர் இருவர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 9:1

யும் சொற்களும் அடிவயிற்றிலிருந்தல்லவா வெளி வருகின்றன? இவ்வளவு உணர்ச்சியுடன் பேசி அழும் ஒருவன் எவ்வாறு தவறு இழைத்திருத்தல் கூடும்? ஒரு வேளை இவனுக்கு ஒன்றும் தெரியாமலே கைகேயி இவ் வஞ்சகத்தைச் செய்திருந்தால்......!" என்று நினைத்தாள். அதுவரை அவள் நினைவு சரியானதே! -

கோசலை பெண் என்ற காரணத்தால் இன்னு ம் ஒரு படி மேலே சென்றுவிடுகிறான். அவள் அந்த ஒரு படி மேலே செல்வதால், நம்முடைய மதிப்பில் ஒரு படி கீழிறங்கி விடுகிறாள். தன் ஐயம் முற்றிலும் தவறானது என்பதை இப்பொழுது நன்கு அறிந்து விட்டாளே! இது வரை யாரிடமும் வாய் விட்டுக் கூறாமல் இருந்த இந்த ஐயத்தை இது தவறானது என்பது நன்கு தெரிந்துவிட்ட இப் பொழுது உடனே மறந்திருக்கலாம். அவ்வாறு செய்திருப் பின், பரதனுடைய வருத்தத்தை மிகுதிப்படுத்தாமல் இருந் திருக்கலாம். அவள் தன் ஐயத்தைக் கூறாமலே இருந் திருப்பினும், பரதன் தான் நினைத்தவற்றைச் செய்யத், தான் போகிறான். அவ்வாறு இருந்தும், கோசலை தன் ஐயத்தை அவனிடமே கூறியது சற்று நல்லதல்லாத இயல்பைக் காட்டுகிறது. பரதன் படுந்துயரத்தைக் கண்ட கோசலை மெள்ள நினைக்கத் தொடங்கி, இறுதியில் அவனிடமே கேட்டும்விட்டாள். இவனுடைய மனத்தில் குற்றம் ஒன்றும் இருத்தற்கில்லை. இவன் தூய்மை யானவனே என்று துணிந்தும், கைகேயி செய்த வஞ்சத்தை நீ அறியாயா? என்றாள்.

“மையறு மனத்துஒரு மாசு உளான்அலன்

செய்யனே,’ என்பது தேரும் சிந்தையாள், 'கைகiபர் கோன்மகள் இழைத்த கைதவம் ஐய! நீ அறிந்திலை போலு மால்' என்றாள்.

- (கம்பன்-2917) கோசலையின் இந்தச் சொற்கள் பரதனை அடியோடு உலுக்கிவிட்டன. அவன் கனவினுங் காணாத ஒரு