பக்கம்:தம்பியர் இருவர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 () தம்பியர் இருவர்

மனையின் உள்ளேயே இருப்பதைப் பண்பாடுடைய கோசலை அறியவில்லை. சந்தர்ப்பச்சான்றுகள் அனைத் தும் பரதனுக்கு எதிராகவே அமைந்து இருத்தவின், அவற்றின் எதிரே கோசலை தன் உள்ளத்துக்கும் அன்புக்கும் எதிராக இம்முடிவுக்கு உறுதியாக வந்து விட்டாள். -

பரதனைப் பற்றி இத்தவறான முடிபுக்குக் கோசலை உந்தப்பட்டாலும், அவள் தவறியும் இதை ஒருவரிடமும் கூறவில்லை. அவள் மனத்துள்ளேயே வைத்துச் சாம்பி னாள். இறுதியாகப் பாட்டன் வீட்டிலிருந்து மீண்ட பரதன், அவளைச் சென்று வணங்கினான்: அழுதான்; கதறினான்; அவள்மீது கு ற் ற மு. ம் சாட்டினான். அன்னையீர், இராமன் திருவடியை யான் காணவில்லை. அரசனாகிய இராமன் இவ்வயோத்தியை வி ட் டு நீங்கலாமா? அவனைப் பிடித்துத் தடுத்து நீர் நிறுத்த வில்லையே! அவனைத் தடுக்காமையால் பெரும்பிழை செய்துவிட்டீர்!’ என்னுங் கருத்தில் பேசினான்.

அடித்தலம் கண்டிலேன் யான்என் ஐயனைப் படித்தலம் காவலன் பெயரற் பாலனோ? பிடித்திலிர் போலும்கீர்? பிழைத்தி ரால்!” எனும்: பொடித்தலம் தோளுறப் புரண்டு சோர்கின்றான்.”

(கம்பன்-219.2)

பரதன் தரையில் விழுந்து அழுது புரண்டு வருந்துவதை :யும், அவன் கூறுவதையும் கண்டு, கேட்ட கோசலையின் உறுதி ஆட்டம் கண்டுவிட்டது. தான் பரதனைப் பற்றிக் கொண்டிருந்த முடிபு எத்துணைத் தவறானது என்பதை அவள் உணரத் தலைப்பட்டுவிட்டாள். தானும் சேர்ந்து சூழ்ச்சி செய்தவன் இவ்வாறு அழுது புலம்பல் கூடுமா? ஒரு வேளை பிறர் மெச்சச் செய்வதாயினும், இவன் அழுகை

1. Circumstancial evidences