பக்கம்:தம்பியர் இருவர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் &姆、

மறுபடியும், சூழ்ச்சியின் அடிப்படை யார்?’ என்ற வினா கோசலையை வாட்டத் தொடங்கிவிட்டது. எவ்வளவு முயன்று பார்த்தும், கைகேயி மட்டுமே இதனைச் செய்தாள் என்று கோசலையால் நினைக்க முடியவில்லை. அவளை யாரோ தூண்டி விட்டு, நன்றாக முறுக்கியும் விட்டுவிட்டனர் என்பதையும் கோசலை உணர்கிறாள். யார் தூண்டியவர்? கூனியைப் பற்றிக் கோசலை நினைக்கவும் இல்லை. அரசரில் பிறந்து, அரசரில் வளர்ந்து, அரசரில் புகுந்து பேரரசியான கோசலை கேவலம் பணிப்பெண்ணாகிய மந்தரை யால் இந்த அந்தரம் வந்தது என்பதைக் கருதிப் பார்க்கவும் நியாய மில்லை. பிறர் கூறினாலும், அவளுடைய அரசியுள்ளம் நம்ப மறுத்திருக்கும். அவ்வாறாயின், அடிப்படை யார்? மீட்டும் அதே வினாத்தான் எழுகிறது.

பல முறையும் ஆராய்ந்து, வேறு வழியே இல்லாமல், கோசலை பரதனைப் பற்றி ஐயுறவு கொள்ளலானாள். சூழ்ச்சி நடைபெறும் காலத்தில் பரதன் அயோத்தியில் இல்லை என்பது உண்மைதான். எனவே, பரதன் தூண்டி யிருத்தல் இயலாது என்று முதலில் நினைத்தாள். ஆனால், பிறர் ஒருவர் மேலும் ஐயங்கொள்ளவியலாத நிலையில் பரதன் மேற்கொண்ட சிறு ஐயம் பெரிய உறுதிப்பாடாய் அவள் மனத்தில் நிலைத்துவிட்டது. அவன் ஒரு வேளை கேகய நாட்டிற்குச் செல்வதற்கு முன்னரே இவ்வாறு ஒரு கருத்தைத் தாயிடம் கூறிப் போயிருந்தாலோ? நல்லறிவும், ஆழ்ந்த கல்வியறிவும் உடையவனாகிய பரதனுக்கே இந்த, அரசியல் சூழ்ச்சி தெரிந்திருக்க நியாயம் உண்டு. எனவே, அவனே இதனைச் செய்தான் என்ற முடிபுக்கே வந்து விட்டாள். கோசலை. பரதனை நன்கறிந்த அவள் மனம் இதை நம்ப மறுத்தாலும், அறிவின் துணை கொண்டு ஆய்ந்து இத்தவறான முடிவிற்கே வந்துவிட்டாள் முதல் தேவியாகிய கோசலை. பாவம் மந்தரை என்ற சூழ்ச்சி யின் பிண்டம் பெண் வடிவத்தில் உட்பகையாக அரண்