பக்கம்:தம்பியர் இருவர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தம்பியர் இருவர்

பரதனுக்குக்கூடத் தெரியாமல் இருக்கலாம் என்று நினைத் தாள் கோசலை.

ஆனால், இராமனை ஏன் காட்டிற்கு அனுப்ப வேண்டும்? நல்ல அரசியல் அறிவு பெற்றவரே இதனைப் செய்வர் உரிமையுடைவனிடமிருந்து அரசாட்சியைச் பறித்துக் கொள்வது ஒரு செயல். ஆனால், அவ்வுரிமை யாளன் நாட்டு மக்கள் கண்ணெதிரே உலவி வருவானாகில், முடி பறித்து ஆள்பவனுக்கு ஆபத்துத்தான் எஞ்சும். முடி இழந்தவன் மேல் மக்கள் கருணை சிறிது சிறிதாகச் சேர்ந்து, இறுதியில் ஆள்பவனுக்கே உலை வைத்துவிடும். எனவே, அறிவுடைய ஒருவன் உரிமையுடையவனை நீக்கி விட்டு, அவன் முடியைப் பெற்றால், உடனே உரிமை யாளனை மக்கள் முன்னிலையிலிருந்து அகற்றி விட வேண்டும். எதிரே இல்லாதவன் நினைவை உடன் மறப்பதே பொது மக்கள் பண்பாடு.' இதனால், அரசியல் சூழ்ச்சியை நன்கு அறிந்த ஒருவனே இராமனைக் காட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்திருத்தல் வேண்டும். அவன் யார்? இவ்வாறு நினைந்து பார்க்கிறாள் கோசலை. கைகேயி இவ்வளவு ஆழ்ந்து அரசியல் நுணுக்கங்களை ஆய்பவள் அல்லள்! எனவே, அவளே செய்ததன்று இச்செயல்! யாரோ அவளைத் தூண்டியிருத்தல் வேண்டும்! அது யாராய் இருக்கலாம்? ஒரு வேளை தசரதனாகவே இருக்கலாமா! அவ்வாறுதான் அப்பெற்ற மனம் முதலில் ஐயுற்றது. தசரதனும் கைகேயியும் சேர்ந்து கொண்டு. இவ்வாறு செய்து விட்டனர் என்றே கோசலை நினைத்து விட்டாள். ஆனால், பிறகு அரசன் இருப்பிடம் சென்று அவன்படும் பாட்டைக் கண்ட பின் தசரதனுக்கு இச்சூழ்ச்சி யில் எவ்விதப் பங்கும் இல்லை என்பதையும், அவனே இச் சூழ்ச்சியால் முதலில் அடிபட்டவன் என்பதையும் கண்டு கொண்டாள் கோசலை.

TT. Public memory is short lived