பக்கம்:தம்பியர் இருவர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 87,

கோசலை மனம் உடனே அமைதியடைந்துவிட்டது. இதோ அவள் பேசுகிறாள்.

“முறைமை அன்றுஎன்பது ஒன்றுஉண்டு; அதல்லது

கிறைகு ணத்தவன் கின்னினும் கல்லனால்; குறைவி லன்’ எனக் கூறினள்.

(கம்பன்-1609)

மகன் முடி கவிக்கவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்திருக்கும் தாயுள்ளங்கூடப் பரதனை நினைக்கும் பொழுது நின்னினும் நல்லன்' என்று கூறிற்று என்றால், இதனைவிடப் பரதனுடைய பண்பாட்டிற்குச் சான்று யாது வேண்டும்? பரதனால் தன் மகனுடைய வாழ்வு கெட்டது என்று தெரிந்த அந்த நேரத்திலேயே, நிறை குணத்தவன்” என்றும், குறைவிலன்' என்றும் கோசலை குறிக்கிறாள் பரதனை என்றால், பரதனைப் பற்றி வேறு புகழுரைகள் வேண்டுமா? ஆனால், கோசலை இவ்வாறு பேசும் நேரத்தில் பரதன் அயோத்தியில் இல்லை; கேகய நாட்டில் பாட்டன் வீட்டில் இருக்கிறான். -

இவ்வளவு சிறப்பாகப் பரதனைப் பற்றிப் பேசிய கோசலையின் மனத்திற்கும்-இராமனைப் பிரிந்து வருந்தும் பெற்ற மனத்திற்கும்-ஒரு போராட்டம் நிகழ்ந்திருத்தல் வேண்டும். பரதன் தவறில்லாதவன் என்று கோசலை மனம் அரற்ற, அவன் தவறுடையவன் என்று இராமனைப் பெற்ற மனம் அரற்றியிருத்தல் வேண்டும். இராமன் காடு செல்லும் வரையில் பரதனைப் புகழ்ந்த கோசலை, அவன் சென்றுவிட்ட பிறகு ஓரளவு மனம் மாறிவிட்டாள். அதிலும், இராமன் காடு செல்ல வேண்டும் என்ற கைகேயி யின் கட்டளையை அறிந்த பிறகு அவள் பரதன் மேலும் ஐயுறவு கொண்டுவிட்டாள். பரதனைப் பெற்ற தாயாயும் தசரதனிடத்தில் அதிக செல்வாக்குள்ளவளாயும் இருந்த கைகேயி, அரசனை ஏமாற்றிப் பட்டத்தைத் தன் மகனுக் காகப் பறித்திருக்கலாம். இவ்வாறு அவள் செய்தது