பக்கம்:தம்பியர் இருவர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தம்பியர் இருவர்

விட்டது. தான் அரசாட்சியை மறுத்துவிட்ட காரணத் தைக் குகனும் புரிந்துகொள்ளவும், இம்முனிவன் இவ்வாறு கேட்பது பரதனுக்குப் பெருந்துயரத்தை விளைத்து விட்டது. பரதன் எதனைச் செய்வான், எதனைச் செய்ய மாட்டான்? என்பதை இம்முனிவன் அறியவில்லையே! எனவே, பரதன் முனிவனிடம் விவரமாகத் தான் வந்த கருத்தை அறிவிக்கிறான். இராமபிரானை மீட்டும் அழைக்க வந்துளேன். அவன் வராவிடில் யானும் அவனுடனே தவம் இயற்றுவேன், என்கிறான். இது நிற்க.

கோசலை கண்ட பரதன்

தானே பெறாவிடினும் பரதனை முழுவதும் வளர்த்த கோசலை கண்ட பரதனைக் காண வேண்டும். நீல மேனியை உடைய ஒரு பெருமகனைப் பெற்றெடுத்த அப்பிராட்டி அவனை வளர்க்க முடியவில்லை: இராமன் கைகேயி மாட்டு வளர்ந்தான். என்றாலும், கோசலைக்கும் நீலமேனியையுடைய ஒரு மைந்தன் கிடைத்துவிட்டான் வளர்ப்பதற்கு. பரதனை வளர்க்கும் கால த் தி ல் அவனுடைய ஒப்பற்ற குணநலங்களில் ஈடுபட்ட கோசலை, பலகாலும் இராமனையும் பரதனையும் ஒப்பிட்டுப் பார்த்திருப்பாள் என்றே நினைக்க வேண்டியுளது. முடி சூடி மகன் வருவான் என்று இராமன் வரவை எதிர்பார்த்து நின்ற கோசலை முன்னர், குழைக்கின்ற கவரி இன்றிக் கொற்ற வெண்குடையும் இன்றி, ஒரு தமியனாய்ச் சென்றான் இராமபிரான். கண்டதாய் மனம் திடுக் குற்றது. நினைந்தது என்? இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு? என்ற வினாவை எழுப் பிற்று அத்தாய் மனம். தாய் எழுப்பிய இந்த வினாவிற்கு மைந்தன் விடை கூறுகிறான், நின் காதல் திருமகன், பங்க மில் குணத்து எம்பி பரதனே, துய்கமாமுடி சூடுகின் றான், என்று. இவ்விடையைக் கேட்ட தாய் மனம் என்ன பாடு பட்டிருக்குமோ, நாம் அறியோம்! ஆனால்,