பக்கம்:தம்பியின் திறமை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24


னுக்கு அவ்வளவு திறமை ஏற்பட்டிருந்தது. தூரிகையும் இருந்தால் பெரிய ஓவியனென்று புகழ்பெறலாம் என்று அவ னுக்கு ஆசை. ஆல்ை அவல்ை ஒரு சிறிய தூரிகையும் வாங்க முடியவில்லை. வேலை செய்து சம்பாதிக்கும் பணம் அரை வயிற்றுக் கஞ்சிக்கே போதவில்லை. இருந்தாலும் தூரிகை வேண்டுமென்ற ஆசைமட்டும் அவன் மனத்திலே எப்பொழு தும் இருந்தது.

இப்படியிருக்கு. பாழுது ஒரு நாளிரவு அவனு ைய கன விலே யாரோ ஒரு மு வர் தோன்றினர். அவர் கையிடல ஒரு அழகான தூரிகை இருந்தது. அதற்குத் தங்கத்திலே பிடி போடப்பட்டிருந்தது. அதல்ை அது பளபளவென்று மின்னிற்று. அந்த முனிவர், மாலியாங், இதோ இந்த மந்திரத் தூரிகையை எடுத்துக்கொள். இதற்கு அதிசயமான சக்தியெல் லாம் உண்டு' என்று சொல்லி அவனிடம் தூரிகையைக் கொடுத்துவிட்டு மறைந்தார்.

மாலியாங் மிகவும் குதுரகலமடைந்தான். அடுத்த நாள் காலையில் அவன் அந்தத் தங்கத் தூரிகையைக் கொண்டு காகிதத்திலே ஒரு குயிலின் படம் வரைந்தான். என்ன ஆச் சரியம்! படம் பூர்த்தியான உடனே அந்தக் குயில் உயிர்பெற்று வானத்திலே பறந்தது! பறக்கும் போதே அழகாகப் பாடிற்று. மாலியாங் துள்ளிக்குதித்தான். மகிழ்ச்சியால் எழுந்து ஆடினன். அவன் ஆற்றங்கரைக்குப் போய்த் தண்ணீருக்கு அருகில் நின்று கொண்டு காகிதத்தில் ஒரு மீன் வரைந்தான். அது உயிர் பெற்றுத் தண்ணீருக்குள் குதித்தது. பலவிதமாக அது மின்னிக்கொண்டு நீந்தி விளையாடியது. அதைக் கண்டும் மாலி யாங் களித்துக் கூத்தாடினன்.

மாலியாங் மிகுந்த ஏழையல்லவா ? அதனுல் அவனுக்கு ஏழைகளின் கஷ்டம் நன்ருகத் தெரிந்திருந்தது. அந்த ஊரில் உள்ள ஏழைகளுக்கு அவன் உதவி செய்ய முன்வந்தான். நிலத்தை உழுவதற்கு யாரிடமாவது எருதுகள் இல்லையென் ருல் அவர்களுக்கு முன்னுல் சென்று மாலியாங் இரண்டு எருது களின் படம் வரைவான். உடனே அந்த எருதுகள் உயிர்பெற்று நிற்கும். வேண்டியவருக்கு அவற்றைக் கொடுப்பான். கலப்பை