பக்கம்:தம்பியின் திறமை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38


"பணக்காரர்களுக்கு இந்த வித்தை வராது. ஆனல் கொஞ்சம் சிரமப்பட்டுக் கற்றுக்கொண்டால் பிறகுமுதுகுவலியே வராது" என்று முச்சீ பதில் சொன்னன். கலாவங்கனுக்கு ஆசை அதிகரித்துவிட்டது. ‘எப்படியாவது எனக்குச் சொல்லிக் கொடு. என்னுடைய தங்கத்தாயத்தை உனக்குக் கொடுக்கிறேன்' என்று அவன் கூறினன்.

'நீ வற்புறுத்திக் கேட்பதால் உனக்குச் சொல்லிக் கொடுக் கிறேன். முதலில் என்னை அவிழ்த்துவிடு. தங்கத்தாயத்தையும் என் கையில் கொடு' என்று முச்சி சொன்னன்.

கலாவங்கனைப் பாலத்தின் அடிப்பாகத்தில் கட்டி வைத்து விட்டு முச்சி புறப்பட்டான். புறப்படுமுன் யாரென்ன கேட் டாலும் நீ பதில் பேசாதே. பதில் பேசினல் எல்லாம் கெட்டுப் போகும்” என்று எச்சரிக்கை செய்துவிட்டு அவன் போய் விட்டான்.

பொழுது விழுந்தது. இருள் எங்கும் பரவிற்று. அந்த வேளையிலே காளிகங்கன் பாலத்திற்கு வந்தான். கத்தியை எடுத்துக் கயிற்றை அறுத்தான். அறுக்கவே அதில் கட்டப் பட்டியிருந்த கலாவங்கன் ஆற்று வெள்ளத்திலே வீழ்ந்து மூழ்கி மறைந்தான். தொலைந்தான் முச்சீ' என்று கூறிக் கொண்டே காளிகங்கன் களிப்போடு வீட்டிற்குத் திரும்பிஞன். மறுநாள் காலையிலே முச்சீ தங்கத்தாயத்தைக் கையில் ஏந்திக் கொண்டு அவனிடம் சென்ருன்.

'நீ எப்படிய டா வந்தாய்?" என்று ஆச்சரியத்தோடு காளிகங்கன் கேட்டான்.

'நீங்கள் ஆற்றிலே என்னைத் தள்ளியது மிக நல்ல காரியம். அதனுல் நான் பெரிய பணக்காரன் ஆகிவிட்டேன். இதோ பாருங்கள் தங்கத்தாயத்து' என்ருன் முச்சீ.

காளிகங்கனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. பணம் என்ற சொல்லைக் கேட்டதும் அவன் நாக்கில் நீர் ஊறிற்று. “எப்படிப் பணக்காரன் ஆளுய்?' என்று ஆவலோடு கேட்டான். “பாலத்திலிருந்து விழுகிறவர்களையெல்லாம் பனக்கார ளுக்க ஆற்றுத் தேவதை திட்டமிட்டிருக்கிறது. நான் ஆற்றில்