பக்கம்:தம்பியின் திறமை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

பையை மேலே இழுத்துக்கொண்டான். பிறகு பையைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு வேகமாகப் புறப்பட்டான். தசுக்கன் ஒழிந்தான் என்பது அவனுடைய எண்ணம். அவனைத் தந்திரமாக ஏமாற்றி விட்டதை நினைத்து நினைத்து அவன் அடிக்கடி வாய்விட்டுச் சிரித்துக்கொண்டே போனன். நடக்க நடக்கக் கோணிப்பையின் பாரமும் அதிகமாவது போல அவனுக்குத் தோன்றிற்று. அவளுல் அதற்குமேல் பை யைத் தூக்கிக் கொண்டு போக முடியவில்லை. பைக்குள் எவ்வளவு தங்கம் இருக்கிறது என்று பார்க்கவேண்டும் என்ற ஆசையும் அதிகமாயிற்று. யாராவது வருகிருர்களா என்று அவன் சுற்றுமுற்றும் பார்த்தான். ஒரே இருட்டாக இருந்த தால் கண்ணுக்கு யாருமே தெரியவில்லை. ஓரிடத்தில் புதராகச் செடிகளும் மரங்களும் இருந்தன. அவ்விடத்தில் அவன் கோணிப்பையை மெதுவாகக் கீழே இறக்கி வைத்தான். "அப்பா! ரொம்பக் கனம். எனக்கு நிறையத் தங்கம் கிடைத்து விட்டது. தசுக்கனை ஏமாற்றிவிட்டேன்' என்று சொல்லிக் கொண்டே எத்தன் பையை அவிழ்த்தான்.

"அண்ணு பயப்படவேண்டாம். பங்குக்கு நான் இருக் கிறேன்” என்று சொல்லிக் கொண்டே தசுக்கன் பையைவிட்டு வெளியே வந்தான். இரண்டணுக் கொடுக்கவேண்டும் என்று அவன் மறுபடியும் வாதாடினன். நெடுநேரம் இருவரும் கூச்சலிட்டனர்.

அவர்கள் இப்படிப் போராடிக் கொண்டிருந்த இடத்திற்குப் பக்கத்திலே ஒரு சுடுகாடு இருந்தது. அங்கு பேய்கள் நிறைய இருந்தன. அவைகளுக்கு இவர்கள் போடும் கூச்சல் நன்ருகக் கேட்டது. என்ன நடக்கிறது என்று பார்க்க இரண்டு குட்டிப் பேய்கள் ஆசைகொண்டன. பதுங்கிப் பதுங்கி அவை மெது வாகத் தசுக்கனும் எத்தனும் போராடிக் கொண்டிருந்த இடத் திற்கே வந்துவிட்டன. ஒரே இருட்டாக இருந்தபடியால் ஒரு வரும் அவற்றைக் கண்டு கொள்ள முடியவில்லை. அதனல் குட்டிப் பேய்கள் இரண்டும் தைரியமாக அவர்கள் பக்கத் திலேயே நெருங்கி வந்தன.

அந்தச் சமயத்தில் தசுக்கன் எத்தனை விடாமல் பிடித்துக் கொள்ள விரும்பித் தன்னுடைய கைகளை நீட்டின்ை. பக்கத்