பக்கம்:தம்பியின் திறமை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53


கொண்டே பின்னல் சென்றன. அவைகள் பக்கத்தில் வரும் போது தசுக்கனுடைய குரல் கேட்டது. விடவே மாட்டேன்; பணங் கொடுத்தால்தான் கையை விடுவேன்" என்று அவன் பழையபடி சத்தம் போட்டுச் சொல்லிக் கொண்டிருந்தான்.

'ஐயா, இந்தாருங்கள் பணம்; ஆயிரம் பேய்களும் ஆளுக்கு இரண்டளுக்கொண்டுவந்திருக்கிருேம். குட்டிப்பேயை விட்டுவிடுங்கள்” என்று கிழப்பேய் கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டது. ' பேயா?” என்று சொல்லிக் கொண்டே தசுக்கன் மூர்ச்சை போட்டுக் கீழே விழுந்தான். தப்பித்ததே போதும் என்று குட்டிப் பேய், வாருங்கள், ஒடிப்போய்விடுவோம் ' என்று சொல்லிக்கொண்டே ஓட்டம் பிடித்தது. மூட்டையைப் போட்டுவிட்டுக் கிழப்பேயும் மற்ற பேய்களும் பின்னலேயே ஒட்டம் பிடித்தன. ஆயிரம் பேய்கள் வந்திருக்கின்றன என்று தெரிந்ததும் மறைந்து நின்றிருந்த எத்தனும் மூர்ச்சை போட்டு விழுந்து விட்டான்.

வெகுநேரம் கழித்து எத்தனுக்கும் தசுக்கனுக்கும் மூர்ச்சை தெளிந்து சுயநினைவு வந்தது. ஆனல் ஒருவன்கூடக் கண்ணைத் திறக்கவில்லை. கண்ணை மூடிக்கொண்டு இரண்டு பேரும் பிணம்போலக் கிடந்தார்கள்.

இரவு நீங்கிப் பொழுது கிளம்பி நன்ருக வெய்யில் உறைத்த பிறகுதான் எத்தன் மெதுவாக ஒரு கண்ணில் பாதி யைத்திறந்து பார்த்தான். பேய்கள் ஒன்றும் இல்லை. தசுக்கன் மாத்திரம் பிணம்போலக் கிடத்தான். அவனுக்குப் பக்கத்திலே கிடந்த பணமூட்டையும் எத்தன் கண்ணில் பட்டது. உடனே அவன் எழுந்து பணமூட்டையைத் தூக்கிக்கொண்டு ஒட்டம் பிடித்தான். தசுக்கனுக்குத் தெரியாமல் எங்காவது போய்விட வேண்டுமென்பது அவன் எண்ணம். ஆளுல் அவன் எண் ணம் நிறைவேறவில்லை. அது வரையிலும் தசுக்கனும் அரைக் கண்ணுல் மெதுவாகப் பார்த்துக்கொண்டு தானிருந்தான். அதல்ை அவன், " அண்ணு பேய் எனக்குத்தான் பணம் கொடுத்தது. பணமூட்டையை வைத்துவிட்டுப் போ” என்று கூறிக்கொண்டே எழுந்து ஓடி வந்தான். எத்தன் முன்னல் ஓடினன். தசுக்கன் பின்னல் தொடர்ந்தான். ' பிடி, பிடி