பக்கம்:தம்பியின் திறமை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

விடாதே; எனக்குப் பேய் கொடுத்த பணத்தை அவன் தூக்கிக் கொண்டு போகிருன் ' என்று கூறிக்கொண்டே அவன் ஓடி வந்தான். ' பேய் எனக்குத்தான் கொடுத்தது ' என்று கூவிக் கொண்டே எத்தன் முன்னுல் ஒடிஞன்.

"பேயாவது பணங்கொடுக்கிறதாவது - இவர்கள் இரண்டு பேரும் பயித்தியம் பிடித்தவர்கள் ' என்று மக்களெல்லோரும் கூறிக்கொண்டே பேசாமல் வேடிக்கை பார்த்துக்கொண் டிருந்தார்கள்.

கடைசியில் ஒரு தனியிடத்திற்கு எத்தன் வந்து சேர்ந்தான். அதற்குமேல் அவளுல் ஓட முடியவில்லை. அவனுக்கு மூச்சுத் திணறிற்று. அவன் அப்படியே களைத்துப் போய்த் தரையில் உட்கார்ந்தான். தசுக்கனும் அவன் பின்னலேயே வந்து சேர்ந்தான். அவனுக்கும் பெருமூச்சு வாங்கிற்று.

கொஞ்ச நேரம் இரண்டு பேராலும் பேச முடியவில்லை. பிறகு எத்தன், “ தம்பி, இனிமேல் நாம் ஒருவரையொருவர் ஏமாற்றுவதை விட்டுவிடுவோம்' என்று சொன்னன். அப்படி யானுல் சரி, பேய் கொடுத்த பணம் எனக்குத்தான் சொந்தம். ஆகவே அதை நீ என்னிடம் கொடு' என்ருன் தசுக்கன்.

" தம்பி, பாதியாவது எனக்குக் கொடு" என்று சொல்லிக் கொண்டே எத்தன் மூட்டையை அவிழ்த்துக் கொட்டினன். மூட்டையிலிருந்து உடைந்த ஓடுகள்தான் சலசலவென்று விழுந்தன. இருவரும் ஏமாற்ற மடைந்தனர்.

அது முதல் இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் ஏமாற்று வதை நிறுத்திவிட்டனர். ஏமாற்றுவதால் யாருக்கும் நன்மை ஏற்படாது என்று அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. பிறகு இரண்டு பேருமாகச் சேர்ந்து நாணயமாக வியாபாரம் செய்து வாழத் தொடங்கினர்கள்.