பக்கம்:தம்பியின் திறமை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 . {} Ö ു ജെറ്റ്

முன்னுெரு காலத்தில் ஓர் ஏழைக்கிழவன் இருந்தான். அவனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. மூன்று பேரு மாகச் சேர்ந்து காலையிலிருந்து மாலைவரை மூங்கிலைக் கிழித்து ஒழுங்கு செய்து, கூடை, முறம் முடைவார்கள். அவற்றை விற்றுக் கிடைக்கும் பணத்தைக்கொண்டு அரிசி பருப்பு முதலி யவை வாங்குவார்கள். உணவு சமைப்பார்கள். ஆனல் அந்த உணவு மூன்றுபேருக்கும் போதுமான அளவு இருக்காது. அதனுல் அவர்கள் இரவிலும், நீண்டநேரம் கூடை, முறம் முடைந்து இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பணம் சம்பாதிக்க வேண்டியதாயிற்று.

அந்தக் காலத்திலே விளக்கே கிடையாது. எண்ணெய் தரும் வித்துக்களும் உலகத்தில் இல்லை. அதனுல் அவர்கள் விறகுக்கட்டைகளை எரியவிடுவதால் உண்டாகும் வெளிச் சத்தில்தான் வேலை செய்ய வேண்டியிருந்தது. அவ்வாறு ஒவ் வொரு இரவிலும் வேலை செய்வதால் கண் ஒளி மங்கி அவர்கள் கஷ்டப்படவேண்டியிருந்தது. அவர்களைப் போலவே மற்ற ஏழைமக்களும் துன்பப்பட்டனர்.

மேலும் அந்தக் காலத்திலே பருத்திச்செடியே உலகத்தில் இல்லை. அதனுல் நூலால் நெய்த துணியும் இல்லை. மக்களெல் லோரும விலங்குகளின் தோலை இடுப்பில் கட்டிக்கொண்டிருந் தார்கள். அதல்ை இரவில் வேலை செய்யும்போது குளிரால் உடம்பு நடுங்கிற்று.

ஒரு நாள் கிழவனும் அவன மக்களும் வழக்கம்போல் இரவில் நெடுநேரம் வேலை செய்து கொண்டிருந்தனர். மங்கிய வெளிச்சததில் உற்றுற்றுப் பார்த்து அவர்களுடைய கண்கள் வீங்கிப்போயின; பார்வையும் மங்கிற்று.