பக்கம்:தம்பியின் திறமை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60


பனிமலைக்குப் போய்ப் பார்த்து வருகிறேன். அந்த மகானைப் பார்த்து உதவிசெய்யும்படி கேட்டுக்கொண்டு முடியுமாளுல் அண்ணனையும் அழைத்து வருகிறேன்' என்ருள்.

இவ்வாறு கூறித் தந்தையின் அனுமதி பெற்றுக்கொண்டு அவளும் புறப்பட்டாள். அண்ணனைப்போலவே அவளும் மிகுந்த சிரமப்பட்டுக் கடைசியில் வெள்ளிப் பனிமலையின் உச் சிக்குச் சென்று மகானைக் கண்டாள். "ஐயா! இரவிலே நல்ல வெளிச்சமில்லாமல் மக்களெல்லாம் துன்பப்படுகிருர்கள். தயவு செய்து சூரியனைப் போலவே நிலாவை நன்ருகப் பிரகாசிக்கச் சொல்லுங்கள். நீங்கள் சொன்னல் அது நடக்கும்' என்று அவள் பணிவோடு கேட்டுக்கொண்டாள்.

"மகளே, உன்னைப்போலத்தான் முன்பு ஒரு சிறுவன் இங்கே வந்து இதே வரத்தைக் கேட்டான். நானும் நிலாவிடம் வேண்டினேன். ஆனல் நிலாவால் அது முடியாது என்று தெரிந்தது" என்ருர் அவர்.

'பிறகு என்ன செய்யலாம்? எப்படியாவது எனக்கொரு வழி சொல்லுங்கள்' என்று கண்ணிர் சிந்திக்கொண்டே அந்தப் பெண் கேட்டாள்.

"அதோ பார், அங்கே இருக்கும் ஆமணக்குச் செடியின் விதையிலே எண்ணெய் இருக்கிறது. அதைக்கொண்டு விளக்கு ஏற்ற முடியும். முன்னுல் இங்கு வந்த பையன்தான் மக்களின் துன்பத்தைப் போக்க இப்படி ஆமணக்குச் செடியாக மாறியிருக் கிருன்' என்று மகான் தெரிவித்தார். அந்தப் பெண் அந்தச் செடியிடம் சென்று அதைக் கட்டியனைத்துக்கொண்டு, "அண்ணு! நீ நல்ல காரியம் செய்தாய்' என்று கூறி மகிழ்த் தாள். பிறகு மகானைப் பார்த்துத் தானும் இப்படி ஏதாவது நல்ல காரியம் செய்ய ஆசைப்படுவதாகச் சொன்னுள்.

"நீ பருத்திச் செடியாக மாறத் தயாரா?” என்று கேட்டார் மகான். “தயார்' என்று உடனே பதில் சொன்னுள் அவள். அவளுடைய உற்சாகத்தைக் கண்டு மகிழ்ந்த மகான் அவளிட மும் ஒரு முத்தைத் தந்தார். அதை விழுங்கும்படி அப்பெண் ணிடம் கூறினர். அவளும் உடனே முத்தை விழுங்கிள்ை.