பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுப் திருத்தலப் பயணம்-(1) 6}, 'பொன்னார் மேனியனே (7.24) என்னும் செந்தமிழ்ப் பதிகம் பாடி மழபாடி மாணிக்கத்தைப் போற்றுகின்றனர். பொன்னார் மேனியனே புலித்தோலை பரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்க்கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே யுன்னையல்லால் இனியாரை நினைக்கேனே. (1) என்பது இப்பதிகத்தின் முதற் ur-so பாடல்தோறும் "மழபாடி மாணிக்கம் ஒளிவிட்டுக் காட்டுவதைக் கண்டு ம்கிழலாம். இத்தலத்தில் சில நாட்கள் தங்கியிருந்து காவிரியின் இருமருங்குமுள்ள தலங்களை வழிபடத் திருவுள்ளங் கொள்ளுகின்றார் நம்பியாரூரர். முதலில் சிலந்திக்கு அருள் செய்த திருவானைக்கா" வருகின்றார். வந்தவர், இத் 3.28:6). பங்குனி உத்திரத்தன்று திருநந்திதேவரின் திருமணத்தைத் திருவையாற்றிலிருந்து ஐயாறப்பர் எழுந்தருளி வந்து நடத்தி வைக்கின்றார். 33. ஆனைக்கா (திருவானைக்கா-ஜம்புகேஸ்வரம்): திருச்சியிலிருந்து 2 கல் தொலைவு. பஞ்சபூதங்களுள் இது நீர் அல்லது அப்புதலம். இது காவிரிக்கும் கொள்ளிடத்திற்கு இடைப்பட்டு, மூலத்தானம் இவ்வாறுகளின் தரைமட்டத்திற்குக் கீழ் இருப்ப தால் எப்போதும் நீர்க்கசிவு இருக்கும்; ஆறுகளின் வெள்ளக்காலத்தில் ஓயாமல் இறைத்துக் கொண்டே இருந்தாலன்றி சம்புகேசுரவமூர்த்தியைச் சேவிக்க முடியாது. இறைப்பதற்கே எண்ணெய்ப்பொறி தனி யாகவுள்ளது. யானைக்கும் சிலந்திக்கும் முத்தி அளித்த தலம். அம்பிக்கை அகிலாண்டேசுவரியின் திருவுருவம் அழகும் அருளும் நிரம்பியது. கச்சியப்ப முனிவர் இத்தலத்திற்கு அருமையான.புராணம் ஒன்று இயற்றியுள்ளார்.