பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 - தம்பிரான் தோழ்ர் அடுத்து கண்டியூர், ஐயாலு (முதல் முறை வருகை), பூந்துருத்தி' ஆகிய தலங்களை இறைஞ்சித் திருவாலம் பொழிலை அடைந்து இறைவனை வணங்கி (பதிகம் இல்லை) அங்குத் தங்கியிருக்கின்றார். அன்றிரவு அவர் துயிலும்பொழுது சிவபெருமான் அவரது கனவில் தோன்றி "மழபாடியினில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ?” என வினவி மறைந்தருளுகின்றார். துயிலுணர்ந்த தம்பிரான் தோழர் காவிரியைக் கடந்து அதன் வடகரையை அடைந்து திருமழபாடிக்கு" ಅಡಿಗಾರು வந்தவர், 28. கண்டிஆர்-தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் பேருந்து வழியில் 6 கல் தொலைவிலுள்ளது. ஐந்து சிரங்களையுடைய பிரமன் சிவனுடன் சமத்துவம் கொண்டாடித் தருககுற்றிருந்த படியால் தேவர் களின் வேண்டுகோட் கிரங்கி, அவனுடைய ஐந்தா வது சிரசைச் சிவன் கண்டித்தெறிந்தம்ையால் கண்டியூர் வீரட்டம் ஆயிற்று. சப்தஸ்தான் தலங் 8ளுள் ஒன்று. - . . . 29. ஐயாறு. 12-வது கட்டுரை அடிக்குறிப்பு 34 காண்க. 30. பூந்துருத்தி (திருப்பூந்துருத்தி : தஞ்சையிலிருந்து 8 கல் தொலைவிலுள்ளது. சப்தஸ்தானதலங்களுள் ஒன்று. அப்பர் அடிகள் இங்குத் திருமடம் அமைத்துப் பல பொதுப் பதிகங்கள் அருளினார். இத்திரும்ட ச் சிதைவினை இன்றும் காணலாம். பாண்டி நாட்டில் சைவம் பரப்பித் திரும்பும்வழியில் சம்பந்தர் அப்பரைக் காண இத்தலத்தருகில் வரும்போது, ஒருவரும் காணாதபடி முத்துச் சிவிகையைத் தாங்கும் தொண்டர்களோடு அப்பர் உள்நுழைந்து தாங்கி வந்தனர். இதையறிந்தவுடன் சம்பந்தர் கீழ் இழிந்து ஒருவரைவொருவர் வணங்கி அளவளா வினர்.(பதிகம் இல்லை). 31. இங்கிலம் பொழில் தஞ்சையிலிருந்து 7 கல் தொலைவிலுள்ளது; சப்தஸ்தான தவங்களில் ஒன்று. திருப்பூந்துருத்தியிலிருந்து கல் தொலைவு. 32. மழபாடி (திருமழுவாடி) திருவையாற்றிலிருந்து 4 கல் தொலைவு. (கொள்ளிடந்தியைக் கடக்க வேண்டும்). திருமால் வழிபட்ட தலம் (சம்பந்தர்