பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம்-(1) 63 வைத்தனன் றனக்கே தலையுமென்னாவும் நெஞ்சமும் வஞ்சமொன் றின்றி உய்ந்தனன் றனக்கே திருவடிக்கடிமை யுரைத்தக்கால் உவமனே ஒக்கும் பைத் தபாம் பார்த்தோர் கோவணத்தோடு பாச்சிலாச் சிராமத்தெம் பரமர் பித்தரே யொத்தோர் நச்சிலாராகில் இவரலாது இல்லையே பிரானார்.(1). என்று பாடுகின்றார். பாடல்தோறும் இவர லா து இல்லையோ பிரானார் என்று இகழ்ந்து கூறுகின்றார். இப் பதிகத் திருக்கடைக்காப்பாக, ஏசின வல்ல இகழ்ந்தன வல்ல எம்பெருமா னென்றெப் போதும் பாயின புகழான் பாச்சிலாச் சிராமத் தடிகளை அடிதொழப் பன்னாள் வாயினாற் கூறி மனத்தினால் நினைவன் வள வயல் நாவலா ரூரன் பேசின பேச்சைப் பொறுத்தில ராகில் இவரலா தில்லையோ பிரானார்.(10) என வரும் பாடலில் இவ்வாறு இகழ்ந்துரைத்ததையும் பொறுத்து அருள் புரிதல் இறைவனது கடமை என்பதனை அன்பினால் வற்புறுத்திப் போற்றுகின்றார். நேசம் நிறைந்த நெஞ்சினராகிய அடியார்கள் ஏசினாலும் இகழ்ந்துரைத் தாலும் உவகை மிக்கு அருள்புரியும் கண்ணுதலப்பன், அன்புடைத் தோழராகிய நாவலூராரது பேரன்பின் பெற்றிக்கு உளமுவந்து அவர் வேண்டும் பொருட்குவை யினை ஈந்தருள்கின்றார். - @ಪಿಸು இகழ்ந்துரைத்தலாகிய புன்மையைச் செய்த நிலையிலும் பேரருளாளராகிய பெம்மான் அப்பெரும்