பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கிலியார் திருமணம் 93 கின்றார். சுற்றத்தாருடன் சங்கிலியாரைத் திருவொற்றி யூருக்கு அழைத்துச் சென்று திருவொற்றியூர் இறைவனை வழிபடுகின்றார். அவ்வூர் மக்கள் இசைவு பெற்றுத் திருக் கோயிலின் அருகே கன்னிமாடம் ஒன்றை அமைக்கின்றார். அதில் தம் அருமைத் திருமகள் சங்கிலியாரை இருக்கச் செய்து, நாங்கள் நினக்கு வேண்டிய பணிகளைச் செய்கின் றோம்; நீ கன்னிமாடத்தில் தங்கி சிவபெருமானுக்கு உரிய திருத்தொண்டுகளைச் செய்வாயாக’’ என்று கூறித் தம்மூர்க்குத் திரும்புகின்றார் ஞாயிறு கிழவர். - கன்னிமாடத்தில் உறையும் சங்கிலியார் நாள்தோறும் மூன்று காலங்களிலும் ஒற்றியூர் இறைவனைப் பணிந்து திருக் கோயிலில் திருமாலை தொடுக்கும் மண்டபத்தில் திரையிட் டிருக்கும் இடத்தில் அமர்ந்து அன்பு நாராக, அஞ்செழுத்தும் நெஞ்சு த்ொடுக்க, நறுமலர்மாலை தொடுத்து இறைவனுக்கு எழில் பெறச் சாத்தும்படி மலர்த் தொண்டு புரிந்து வரு கின்றார். இது பண்டு கயிலைத் திருமலையில் புரிந்து வந்த "பூர்வ வாசனையினால் ஏற்பட்டதென்று நாம் கருதலாம். இந்நிலையில் திருஆரூரர் சங்கிலியாரை மணந்து கொள்ள வேண்டிய ஊழ்செயற்படத் தொடங்குகின்றது. ஒற்றியூர்ப் பெருமானை வழிபட்டு மகிழ்ந்திருக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் - தம்பிரான் தோழர் - ஒருநாள் அடியார்கள் செய்யும் பலவகையான திருத்தொண்டுகளை யும் கண்டு வரும்போது மலர் மாலை தொடுக்கும் திருமண்டபத்தை அணுக நேரிடுகின்றது. அப்பொழுது இறைவனுக்குச் சாத்தும்படி தாம் தொடுத்த மலர் மாலை களைக் கொடுத்துவிட்டு மின்னற்கொடி போன்று திரை யினுள்ளே மறையும் சங்கிலியர்ரை இறைவனருள் கூட்டிய நல்விதியால் கண்ணுறுகின்றார்; காதல் அரும்பத் தொடங்கு கின்றது. மலர்தொடுக்கும் மண்டபத்தை நீங்கி ஒரு புறமாக ஒதுங்கி நின்று, 'கோவா முத்தும் சுரும்பு ஏறாக்கொழுமென்