பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 - தம்பிரான் தோழர் இனிமேல் திருவொற்றியூரையடைந்து சிவனார் அருளிற் செல்வேன்' என மறுமொழி பகர்கின்றார். தம் அருமை மகளின் மனக் கருத்தறிந்த தாயும் தந்தையும் மிகவும் சோர் வுற்று அச்சமும் வியப்பும் உடையவர்களாய்த் தம் மகள் சொன்ன கருத்தை உலகத்தார் அறியாமல் மறைத்து விடுகின்றனர். :s - இந்நிலையில் ஞாயிறுக் கிழவரின் குலத்தால் ஒப்புடைய ஒருவன் சங்கிலியாரின் தகுதியை யுணராமல் அவரை மணம் செய்து கொள்ள விரும்புகின்றான். மகட்பேசி வருவதற்குச் சிலரை ஞாயிறு கிழவர்பால் அனுப்புகின்றான். ஞாயிறு கிழவர் தம் மகளது மனக்கருத்தினை வெளியிடுதல் தகுதி யன்றெனக் கருதி தீங்கு நேரிடாதவாறு வேறொருவகையால் சமாதானம் கூறி அனுப்பி விடுகின்றார். இவ்வாறு பெண் கேட்க வந்தவர்கள் திரும்பிச் செல்வதற்கு முன்னமே அவர் களை அனுப்பியவன் அங்கு வந்து சால்பு மிக்க சங்கிலியாரை இகழ்ந்துரைக்கின்றான். இவனது அடாத செயலைக் கண்டு வெறுப்புற்ற பெரியோர் இவன் இறந்தவனை யொத்தான் என எண்ணி அவனை அவ்விடத்தைவிட்டு அகற்றுகின்றனர். அங்கனம் சென்ற அவன் விரைவில் இறந்தொழிகின்றான். உய்ய வேண்டும் என்ற நினைவுடையவர்கள் சங்கிலியார் பற்றி இங்ஙனம் பேசத் தகாதவற்றைப் பேசுதல் கூடாது என்ற உண்மையை உலகத்தார் அறியும்படி செய்த விதி போல் இந்நிகழ்ச்சி நடை பெற்று விடுகின்றது. மணம் பேச வந்து மனம் போனபடிப் பேசியவன் மரித்த செய்தி ஞாயிறு கிழவரை எட்டுகின்றது. உடனே அன்பிற் சிறந்த உறவினர்களைத் தருவித்துத் தம் மகள் சங்கிலி யாரின் திருவருள் நினைவினை உள்ளபடி எடுத்துரைக் கின்றார். மிகவும் அச்சமுடையவராய் இனி, சங்கிவியார் கருதிய வண்ணம் அவரைத் திருவொற்றியூரில் சிவத் தொண்டு புரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று துணி