பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. சங்கிலியார் திருமணம் திருக்கயிலாயத்தில் உமையம்மையாரின் சேடியருள் மற்றொருவராகிய அநிந்திதையார் தொண்டை நாட்டில் ஞாயிறு என்னும் ஊரில் வதியும் ஞாயிறு கிழவர் என்ற வேளாளருக்கு அருமைத் திருமகளாகத் தோன்றுகின்றார். பெற்றோர். இவருக்குச் சங்கிலியார் என்ற திருநாமம் இட்டு வளர்த்து வருகின்றனர். இவர் பெதும்பை பருவம் எய்தி யதும் பெற்றோர். இவர்தம் திருமணம் பற்றிச் சிந்திக், கின்றனர்; உரக்கவும் பேசுகின்றனர். ஒருநாள் தம் திருமணங் குறித்துப் பெற்றோர் பேசு வதை அயலே நின்ற சங்கிவியார் செவி மடுத்து 'இவர்கள் பேசுவது என் திறத்துச் சிறிதும் பொருந்தாது. ஈசன் திரு வருள் பெற்றார் ஒருவர்க்கே நான் மனைவியாதற்குரியேன். என் கருத்துக்கு மாறாக பாது விளையுமோ?’ என மணங் . கலங்கி மூர்ச்சித்து நிலமிசை நீடு வீழ்கின்றார். இதனைக் கண்ணுற்ற தாய்தந்தையர் துணுக்குற்று பதை பதைத் தோடிச் சங்கிலியாரைகைகளால் தாங்கி எடுத்து முகத்திற் பனிநீர் தெளித்து மூர்ச்சை தெளிவிக்கின்றனர். மூர்ச்சை தெளிந்தெழுந்த தம் அருமைச்செல்வியை தோக்கி, “நினக்கு . நேர்ந்த துன்பம் யாது?’ என வினவ, அதற்கு அம்மகள், 'நீங்கள் இப்பொழுது என் திருமணத்தைக் குறித்துப் பேசிய உரை எனக்குச் சிறிதும் ஏற்புடைத்தன்று. சிவபெருமான் திருவருள் பெற்ற ஒருவரைத்தான் யான் மணத்தற்குரியேன்.