பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தம்பிரான் தோழர் ஆலந்தான் உகந்தமுது செய்தானை ஆதியை அமரர்தொழு தேத்தும் சீலந்தான் பெரிதும் உடையானைச் சிந்திப்பாரவர் சிந்தை புளானை ஒலவார்குழ லாளுமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற காலகாலனைக் கம்பன் எம்மானை காணக்கண் அடியேன் பெற்றவாறே.(1) என்பது முதற் பாடல். இந்தத் திருப்பதிகத்தைப் பாடிப் போற்றி உடன் வந்த சிவனடியார்களுடன் இறைவனைக் கும்பிட்டுக் கச்சி நகரிலேயே தங்குகின்றார். . இந்நிலையில் 'திருவாரூரையடைந்து என் உயிர்க் குயிராம் பெருமானை என்று காண்டேன்?’ என்னும் ஏக்கம் தலைகாட்டத் தொடங்குகின்றது. உடனே திருவாரூர் மீது "அந்தியும் நண் பகலும் (7.83) என்னும் திருப்பதிகத்தைப் பாடுகின்றார். இதன் முதற் பாடல், --J அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்வி முந்தியெழும் பழைய வல்வினை மூடாமுன் சிந்தை பராமரியாத் தென்திரு வாரூர்புக்(கு) எந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே.(1) என்பது. இந்தப் பதிகத்தைப்பாடியவண்ணம் காஞ்சியிலிருந்து புறப்பட்டுத் தொண்டை மண்டலத்தைக் கடந்து திருவாரூரை நோக்கி வருகின்றார். இத்துடன் தொண்டைநாட்டுத் திருத் தலவழிபாடு நிறைவு பெறுகின்றது. முப்பத்திரண்டு தலங். களில் பதிநான்கு தலங்களைச் சேவிக்கின்றார். இவற்றுள் பதிகம் பெற்றவை பன்னிரண்டு: பதிகம் ப்ெறாதவை இரண்டு; அவை திருவல்லம், திருவூறல் என்பவை. .