பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாட்டுத் திருத்தலப் பயணம் - 896 பின்னர் தம்பிர்ான் தோழர் திருவூறல்" என்ற தலத்தைப் பணிகின்றார் (பதிகம் இல்லை). அடுத்துக் காஞ்சி யம்பதியை வந்து எய்துகின்றார். உலகம் சன்றஉமையம்மை யார் எழுந்தருளியுள்ள திருக்காமக் கோட்டம் என்னும் திருக் கோயிலை அடைந்து அறம் வளர்த்த நாயகியாகிய அன்னை யின் திருவடிகளைத் துதித்து வணங்குகின்றார். பின்னர் திருவேகம்பம் என்னும் ஏகாம்பரநாதர் சந்நிதியை அடை கின்றார். கச்சி ஏகம்பப் பெருமான்முன் நின்று தேவர்கள் பொருட்டு நஞ்சுண்ட பெருமானே, கடையவனாகிய × அடியேன் பின்விளைவதனை எண்ணாமல் செய்த பெரும் பிழையப் பொறுத்து அடியேற்கு மறைந்த கண்களைக் காட்டி அருள் புரிவாயாக’ என்று நில மிசை நீடு வீழ்ந்து வணங்குகின்றார். இடக்கண் பெறுதல் : ஏகாம்பரநாதர் பொங்கிய பேரன் பால் போற்றிய தம்பிரான் தோழர்க்கு மறைந்த இடக் கண்ணைக் கொடுத்தருளி மலைமகளார் வழிபட்ட தமது திருக்கோலத்தையும் காட்டியருளுகின்றார். இடக்கண்ணைப் பெற்றமையால் இறைவனது எழில் மேனியைக் கண்டு களிக் கின்றார். இந்த எக்களிப்பு "ஆலந்தான் உகந்தவன் (76.1) என்ற முதற்குறிப்பையுடைய செந்தமிழ் பதிகமாக மலர் கின்றது. 18. ஊறல் (தக்கோலம்): செங்கல்பட்டு. அரக்கோணம் இருப்பூர்திப் பாதையில் தக்கோலம் 3 கல் தொலை வில் உள்ளது. கோயிலின் மேற்சரிவில் ஒர் இயற்கை ஊற்று (சுனை) உள்ளது. இதிலிருந்து தண்ணிர் கோயிலின் உட்பிரகாரத்தில் தரைமட்டத்தில் ஒரு நந்திவாயின் வழியாக வந்து, நாற்புறமும் ஓடி, கோயிலுக்கெதிரில் மற்றொரு நந்தி வாயின் வழி யாக விழுந்து ஒரு சிறு குளத்தை நிரப்பி வழிந் தோடுகின்றது. சோழமன்னனுக்கும் மேலைச் சாளுக்கிய மன்னனுக்கும் போர் நிகழ்ந்த இடம் இங்கு மணற் பெருவெளியாகக் காணப்பெறுகின்றது.