பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 - . தம்பிரான் தோழர் தம்பிரான் தோழராக இருந்தும் தம்பிரானின் திருவுள்ளக் குறிப்பினை அறிய முடியாத 66ು.ಟಿ. "இறைவன் அருள் என்னளவில் இவ்வளவுதான் போலும். என்று எண்ணி இரங்கி ஏங்கும் நிலையில் வெண்பாக்கத்தை நீங்கிப் பழையனுர்' என்ற திருத்தலத்தை அடைகின்றார். அங்குக் காரைக்கால் அம்மையார் தலையாலே நடந்தெய்திய திருவாலங்காட்டெல்லையினை இறைஞ்சி நின்று, "முத்தா முத்தி தரவல்ல" (7.52) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடிப் பரவுகின்றார். முத்தா முத்தி தரவல்ல முகிழ்மென் முலையாள் உமைபங்கா சித்தா சித்தித் திறங்காட்டும் சிவனே தேவர் சிங்கமே பத்தா பத்தர்பலர் போற்றும் பரமா பழையனுர் மேய அத்தா ஆலங் காடா உன்னடி யார்க்கடியே னாவேனே. (1) என்பது இப்பதிகத்தின் முதற்பாடல். 17. இஃது ஆலங்காடு (திருவாலங்காடு) சென்னை" ஆரக்கோணம் இருப்பூர்திப் பாதையில்-திருவள்ளுரி லிருந்து 3 கல் தொலைவிலுள்ளது. 84 மணங்கு எடையுள்ள செப்பேடுகளில் முதல் இராஜேந்திர் சோழன் (கங்கை கொண்ட சோழன்) பழையனுரர் கிராமத்தைத் தி ரு வா லங் கா டு ைடய மகா தேவர்க்குத் தானமாகக் கொடுத்த செய்தி விவரிக்கப் பெற்றுள்ளது. காளியோடு தாண்டவம் புரிந்த சிவபெருமான் அவள் சமமாக ஆடுவதைக் கண்டு, அவளைத் தோற்கடிக்கக் கருதி தனது இடது காலைத் தலையளளவு தூக்கி ஊர்த்துவ தாண்டவம் புரிந்த அருமைத் தலம். காரைக்கால் அம்மையார் தலையாலே நடந்து வந்த தலம். பழையனூர் ஆலங்காட்டிற்கு முக்கால் கல் தொலை விலுள்ளது. இங்குக் கார்ைக்கால் அம்மையாரின் திருக்கோயில் ஒன்றும் உள்ளது.