பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 தம்பிரான் ಡಿ.5rçಕೆ முகையும் அனைய இந்த மின்னுக் கொடியாள் யார் கொல்?’ என்று வினவுகின்றார். இதனைக் கேட்டு அருகே நின்றவர்கள், "இவர்தாம் சங்கிலியார்; பெருகுந் தவத்தால் முப்போதும் ஒற்றியூர் இறைவனுக்கு மலர்மாலைகள் தொடுத்துத் திருப்பணி புரியும் கன்னியார்' என்று பகர் கின்றனர். . இம்மொழி கேட்ட தம்பிரான் தோழரின் மனம் சிந்திக்கத் தொடங்குகின்றது. பூர்வ ஞானம் கட்டுப் படு கின்றது. "மகளிர் இருவர் காரணமாக இப்பிறவியைக் கயிலைநாதர் எனக்கு எய்துவித்தருளினார். அவ்விருவருள் ஒருத்தி பரவையார் என்பது தெளிவாயிற்று. மற்றையவள் சங்கிவியாகிய இந்த நங்கையாக இருக்குமோ?’ என்று ஐயுறு: கின்றார். "இறைவனின் அடியானாக வாழ்ந்து வரும் என்னை வருத்தி, 'என்ஆர்உயிரும் எழில் மலரும் கூடப் பிணைக்கும் இவள் தன்னை' ஒற்றியூர் இறைவன் பால் வேண்டிப் பெறுவேன்' எனத் துணிகின்றார். ஒற்றியூர் இறைவன் சந்நிதியை அடைந்து, - 'மங்கை யொருபால் மகிழ்ந்ததுவும் அன்றி மணிநீள் முடியின்கண், கங்கை தன்னைக் கரந்தருளும் காதல் உடையீர்! அடியேனுக்(கு) இங்கு துமக்குத் திருமாலை தொடுத்துனன் உள்ளத்தொடை அவிழ்த்த திங்கள் வதனச் சங்கிவியைத் - .." தந்துஎன் வருத்தம் தீரும்'என’ . 1. சேக்கிழாரின் இந்த வாக்கு (ஏயர்கோன் - 230) -- கவிங்கத்துப் பரணியிலுள்ள, - . முருகிற்蠶 蠶 யிரும் திருே ಡ್ತಿ |g : என்ற தாழிசையை (தாழிசை 50) நின்ைக்கச் செய்கின்றது. - - 2. பெ.பு: ஏயர்கோன் 232