பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H}} தம்பிரான் தோழர் எனவும், தொய்யேனைப் பொருட்படுத்துச் சந்திஜியோ டெனைப்புணர்த்த தத்துவனை(7.5:11) எனவும், - பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே (7.46:11) எனவும் நம்பியாரூரர் நெஞ்சம் தெக்குருகிப் போற்றி வுள்ளதால் அறியலாம். சங்கிலியாரை மணந்து கொண்ட தம்பிரான் தோழர் வாழ்க்கைத் துணையாகிய அவருடன் கூடி ஐம்புல இன்பங் களை ஆரத் துய்க்கும் சிற்றின்ப நிலையிலும் சயிலைமலை வப்பனின் திருவருளாகிய பேரின்பத்தையே நுகர்ந்து மகிழும் சிவயோ கியராகத் திகழ்ந்தனர் என்ற செய்தி, - ஒர்ந்தனன் ஒர்ந்தனன் உள்ளத்துள்ளேநின்றஒண்பொருள் சேர்ந்தனன் சேர்ந்தனன் -- சென்று திரு வொற்றியூர்ப் புக்குச் சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலிமென்றோள் தடமுலை ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத்துரையன் அருளதே (7.45:41, என வரும் சுந்தரரின் வாய்மொழியால் தெளியலாம்.